Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

காசை மிச்சப்படுத்துங்க பாஸு! சத்யா-வின் ரூ. 7000 கேஷ் பேக் ஆஃபர்!

ஊரடங்கு தளர்வு 'கடை கண்ணிப் பக்கம் எப்படா சுதந்திரமாக காலடி எடுத்துவைக்கலாம்!' என்றிருந்த சாமானியரின் நெஞ்சுக்குக் கொஞ்சம் இதமாய்த்தான் இருக்கிறது, இருந்தாலும் விரும்பியதை வாங்கலாம் என்றால், கொரோனாவுக்கு முன் நம்மிடம் இருந்த பண வரவு குறைந்துள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

பல வீடுகளில் கொஞ்சம் விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க முடிவெடுத்திருப்போம், கொரோனா காலத்தில் பணப் பற்றாக்குறை காரணமாக 'இப்போதைக்கு வாங்க வேண்டாம்' எனத் தள்ளிப் போட்டிருப்போம். அப்படிப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்களை எல்லாம் இப்போது பணத்தை மிச்சம் செய்து வாங்கலாம்! எப்படி?

பணத்தை மிச்சப்படுத்துவது ஒரு முக்கியமான திறமை... அந்தத் திறமை உங்களிடம் உள்ளதா?

திட்டம் போட்டு பொருள்கள் வாங்கினால், தள்ளுபடி, இலவசங்கள், கேஷ் பேக் போன்ற விஷயங்கள் மூலம் ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரக்கணக்கில் உங்களது பணத்தைப் மிச்சப்படுத்தலாம். முதலில் அதற்கு சலுகைகள் கிடைக்கும் இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டும்.

சத்யா வழங்கும் அதிரடி ஆஃபர்கள்!

'சத்யா ஏஜென்சீஸ்' - தமிழகம் முழுக்க பல கிளைகள் கொண்ட முன்னணி வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிலையமாகும். தங்களது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ரூ. 2000 வரை கேஷ் பேக் சலுகை வழங்குகிறது சத்யா!

உங்கள் அருகில் இருக்கும் சத்யா ஷோரூமுக்குச் செல்லுங்கள், உங்களுக்குப் பிடித்த பொருளை, பஜாஜ் வழங்கும் நோ காஸ்ட் இ.எம்.ஐ. மூலம் வாங்குங்கள். இதன்மூலம் இரண்டாயிரம் ரூபாய் வரை கேஷ் பேக் பெறலாம், இதை நீங்கள் விரும்பும் பிற பொருள்கள் வாங்கப் பயன்படுத்தலாம். பஜாஜ் இ.எம்.ஐ குறித்து சத்யாவிலேயே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம், ரொம்ப சிம்பிளான விஷயம்தான்!

இந்த வார ஆஃபர் - ரூ. 5000 உங்களுக்கு மட்டுமே!

ஒவ்வொரு வாரமும் பலவிதமான அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகிறது சத்யா. செப்டெம்பர் 18-24 வரை மட்டுமே உள்ள குறுகிய கால ரூ. 5000 கேஷ் பேக் ஆஃபரை இப்போது அறிவித்துள்ளது.

ப்ளூஸ்டார் எலனார் ஆர்.ஓ + யு.வி வாட்டர் ப்யூரிஃபையர் - 8 லிட்டர் - ரூ. 18,500 மதிப்புள்ள இந்த வாட்டர் ப்யூரிஃபையரை ரூ. 16,990-க்கு வழங்குகிறது சத்யா. இந்த வாட்டர் ப்யூரிஃபையருக்குத்தான் இந்த வாரம் 5000 ரூபாய்க்கான கேஷ் பேக்கை வழங்குகிறது சத்யா...

இந்தக் கேஷ் பேக்கைக் கொண்டு 5000 ரூபாய்க்கு நீங்கள் விரும்பும்,

மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், கேஸ் ஸ்டவ், பிரெஷர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர், அவன் என எதை வேண்டுமானாலும் சத்யாவில் வாங்கலாம்!

ப்ளூஸ்டார் எலனார் ஆர்.ஓ + யு.வி வாட்டர் ப்யூரிஃபையர் அம்சங்கள்:

* 8 லிட்டர் கொள்ளளவு

* இரண்டு லேயர்கள் கொண்ட ஆர்.ஓ + யு.வி

* செம்பு மற்றும் ஆக்டிவ் கார்பன் கொண்டுள்ள சாதனம்

* 6 கட்ட சுத்திகரிப்பு - தூய்மையான தண்ணீருக்குக் கேரண்டி

* ஏ.பி.டி. லாம்ப் யு.வி கதிர்கள் தீய நுண்ணுயிரிகளை அழிக்கின்றன

* சைல்ட் லாக், டேங்க் ஃபுல் இண்டிகேட்டர், நுண்ணிய துளைகள் கொண்ட வடிகட்டிகள்

* ஒரு வருட வாரண்டி

நீங்கள் தண்ணீர் கேன் வாங்கும் குடும்பத்தினர் என்றால், அதைவிட பலமடங்கு சிக்கனமானது ப்ளூஸ்டார் எலனார் ஆர்.ஓ + யு.வி வாட்டர் ப்யூரிஃபையர். மிக மிக சொற்பமான அளவு கரண்ட் மட்டுமே எலனார் ஆர்.ஓ பயன்படுத்துகிறது, இதுதான் ஸ்மார்ட்டான வழியில் பணத்தைச் சிக்கனப்படுத்தும் முறை!

பஜாஜ் இ.எம்.ஐ மூலம் ரூ. 2000 கேஷ் பேக் மற்றும் செப்டெம்பர் 24 வரையிலான ரூ. 5000 கேஷ் பேக்-கை இப்போதே பெற்றிட உங்கள் அருகிலுள்ள சத்யா ஷோ ரூமுக்கு விரைந்திடுங்க!



source https://www.vikatan.com/news/miscellaneous/sathyas-cash-back-offer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக