Ad

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

காயத்துடன் சுற்றும் மக்னா யானை! - கோவை வனத்துறை முக்கிய அறிவிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால், கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாயில் காயத்துடன் உணவு சாப்பிட முடியாமல் ஒரு மக்னா (தந்தம் இல்லாத ஆண் யானை) யானை சுற்றுவதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். வனத்துறை அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தபோது, அந்த யானை ஆனைக்கட்டி வழியாக கேரளாவுக்குள் சென்றுவிட்டது.

மக்னா யானை

Also Read: கோவைக்கு வரும் யானை... உயிர் தப்புமா? | Shock Report | Elephant Deaths

இதையடுத்து, மன்னார்காடு பகுதி வனத்துறையினர் அந்த யானைக்குச் சிகிச்சை அளித்தனர். உடல்நலக்குறைவால், யானை சற்று மெலிந்தும் காணப்படுகிறது.

அந்த யானை தமிழக-கேரள எல்லையில் வலம் வந்தாலும், கேரளாவில் அது நல்ல பரிட்சயம். அங்கு அந்த மக்னா யானைக்கு `புல்டவுசர்’ என்று பெயரிட்டுள்ளனர். காரணம், அந்த யானை வீடுகளை இடித்து தரமட்டமாக்கும் செயல்களில் அடிக்கடி ஈடுபடும். இதனால், கேரள மக்கள் அந்த யானையை புல்டவுசர் என்று அழைப்பார்கள். மக்னா யானையின் நாக்குப்பகுதி சிதறி, மேல் தாடை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

மக்னா யானை

அந்த யானை அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டால் காயமடைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் அந்த யானை கேரளாவில் இருந்து மீண்டும் தமிழகம் வந்தது.

Also Read: கோவைக்கு வரும் யானை... உயிர் தப்புமா? | Shock Report | Elephant Deaths

இதையடுத்து, அந்த யானையைக் கண்காணிப்பு கேமரா அமைத்தும், தனிப்படை அமைத்தும் வனத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வனத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள ஓர் வீடியோவில், யானை நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கலந்த உணவை உட் கொள்கிறது. இதுகுறித்து கோவை மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ்,``நேற்று முன்தினம் இரவு, மக்னா யானை 8 கி.மீ தூரம் நடந்து 3 குடிசை வீடுகளை சேதமாக்கியுள்ளது.

மக்னா யானை

மேலும், பயிர்களையும் சாப்பிட்டுள்ளது. எனவே, சின்னத்தடாகம் சுற்று பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள், மஞ்சள், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து தண்ணீரில் கரைத்து அவற்றை, அரிசியில் கலந்து வீட்டை சுற்றி ஆங்காங்கே தூவிவிட்டால், யானை அருகில் வராது“ எனக் கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-forest-department-important-announcement-over-injured-elephant

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக