Ad

புதன், 23 செப்டம்பர், 2020

``சல்மான் கானுடன் `ராதே’, அடுத்து அசோக் செல்வன்!'' - மேகா ஆகாஷ் செம பிஸி!

லாக்டெளன் நாள்களைக் கடந்து சினிமாவின் நியூ நார்மல் ஆரம்பமாகியிருக்கிறது. தமிழக அரசு ஷூட்டிங் தொடங்கலாம் என அறிவித்தவுடனே சினிமா ஷூட்டிங் பரபரப்பாகத் தொடங்கிவிட்டது.

முதல் பெரிய ஹீரோவாக விஜய் சேதுபதி ஷூட்டிங்கில் கலந்துகொள்ளத் தொடங்கிவிட்டார். படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. இதற்கிடையே ஹீரோயின்கள் பலரும் இந்த லாக்டெளன் நாள்களில் அதிக பாலோயர்களைப் பிடிக்க போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் வெளியான மேகா ஆகாஷின் போட்டோஷூட்டும் பல லட்சம் ஹார்ட்டீன்களை அள்ளியிருக்கிறது.

மேகா ஆகாஷ்

Also Read: அரசியல் ரூட் எடுக்கும் `நீட்' சூர்யா... பரபரக்கும் இயக்குநர் பாண்டிராஜ் படம்! #VikatanExclusive

மேகா ஆகாஷின் பிளான் என்ன என விசாரித்தோம். "மேகாவின் அண்மைக்கால போட்டோஷூட் அனைத்தும் அவரின் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலிஸ்ட்டுகளின் ஆசைப்படி அவர்களுக்காக எடுத்ததுதான். அக்டோபர் மாதத்திலிருந்து படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகவிருக்கிறது. முதலில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துக்கொண்டிருக்கும் 'ராதே' படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடக்கவிருக்கிறது. இதற்காக மும்பை செல்கிறோம். இதற்கு அடுத்து அசோக் செல்வனுடன் நடிக்கவிருக்கிறார் மேகா ஆகாஷ்" என்கிறார்கள்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/megha-akash-upcoming-movies-with-salman-khan-and-ashok-selvan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக