Ad

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

``விஜய் சார் ஷூட்டிங்ல பேசாமலே இருந்தா எப்படி நடிக்கமுடியும்?!'' - சரண்யா மோகன்

உங்களோட சினிமா கரியரில் ரொம்பவே பேசப்பட்டப் படம், ‘யாரடி நீ மோகினி’... அதில் நடித்த அனுபவம் சொல்லுங்க?

சரண்யா மோகன்

’’என்னை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய ஃபாசில் சாருக்காக சில படங்களில் நடிச்சேன். அதுக்கப்புறம் நடிக்க வேணாம்னு நான் நினைச்சிட்டு இருந்த சமயத்தில்தான், ’யாரடி நீ மோகினி’ படத்துக்காக ஆடிஷனுக்கு வர சொன்னாங்க. நான் முதலில் எங்க அப்பாக்கிட்ட, ‘வேணாம்பா... எனக்கு தமிழ் வேற பேச வராது’னு சொன்னேன். ஆனால், அவங்க ஆடிஷனுக்கு வரச்சொல்லி கேட்டுட்டே இருந்தாங்க. சரி, தனுஷ் சார், நயன்தாரா மேடம் நடிக்கிற பெரிய படம். எப்படியும் நம்மளை செலக்ட் பண்ண மாட்டாங்க. சும்மா ஆடிஷன்ல நடிச்சிட்டு, சென்னையை சுத்திப்பார்த்துட்டு வந்திடலாம்னுதான் சென்னைக்கு வந்தேன். ஆடிஷனுக்கு போனால், அங்க பல பேர் வந்திருந்தாங்க. ’அப்பாடா, அப்போ நமக்கு நிச்சயமா வாய்ப்பு கிடைக்காது’னு முழுசா நம்பிட்டேன். ஆடிஷன்ல கஸ்தூரி ராஜா சார்தான் இருந்தார். அப்போ அவர், ‘நீ ஒண்ணுமே பண்ண வேணாம்மா. அவங்க தாவணியும், மல்லிகைப்பூவும் கூடவே ரெண்டு வசனமும் கொடுப்பாங்க. டிரெஸ் பண்ணிட்டு வந்து அதை சொன்னால் போதும்’னு சொன்னார். சுத்தமா மேக்கப் எதுவுமே போடாமல், அவங்க கொடுத்த வசனத்தை பேசிட்டு, ‘நான் போகலாமா’னு கேட்டேன். ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டைரக்டர் வந்து சொல்லுவார்’னு சொன்னாங்க. 'நோ'னு சொல்லப்போறதுக்கு ஏன் வெயிட் பண்ணச் சொல்றாங்கனு நானும் யோசிச்சேன்.

சரண்யா மோகன்

ஆனால், டைரக்டர் வந்து, ’நீங்கதான் செலக்ட் ஆகியிருக்கீங்க’னு சொன்னார். இவ்வளவு பெரிய நடிகர்கள் இருக்குற படத்துல என்னை செலக்ட் பண்ணியிருக்காங்கங்கிற சந்தோஷமே எனக்கு இல்லாமல், காத்து போன பலூன் மாதிரி நான் உட்கார்ந்திட்டு இருந்தேன். அப்பறம் ஷூட்டிங் தென்காசியில நடந்தப்போதும், முதல் நாள் ரொம்ப பயத்தோட இருந்தேன். மொழி தெரியாமல் எப்படி சமாளிக்கப்போறோம்கிற பயம்தான் அதிகமாக இருந்துச்சு. முதல் நாள் எனக்கு சீனும் இல்லை; ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் எல்லார்கிட்டேயும் பேசிப் பழகுறதுதான் முதல் அசைன்மெண்ட். ரெண்டாவது நாளே தனுஷ் சார்கிட்ட ப்ரபோஸ் பண்ற சீன்தான் ஷூட் பண்ணினாங்க. அதுக்கப்புறம் பயம் போய் எல்லார்கிட்டேயும் நல்லா பழக ஆரம்பிச்சிட்டேன். ’யாரடி நீ மோகினி’ படம்தான் எனக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி கொடுத்துச்சு. அதிலும், இந்தப் படத்தின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனில் நான் நடிச்ச கேரக்டருக்கு பாட்டு இருக்காது. ஆனால், தமிழில் ’பாலக்காட்டு பக்கத்திலே’ பாட்டோட ரீமிக்ஸ் சாங் என் கேரக்டருக்காக வெச்சிருந்தாங்க. அதெல்லாமே எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துச்சு.’’

’வெண்ணிலா கபடிக்குழு’ படத்தோட தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு வெர்ஷன்லயும் ஹீரோயினாக நடிச்ச அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க?

சரண்யா மோகன்

’’ ‘யாரடி நீ மோகினி’ படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. அப்படி வந்தப் படம்தான், ’வெண்ணிலா கபடிக்குழு’. முதலில் இந்தப் படத்தில் நான் நடிக்கலைனு சொல்லிட்டேன். அவங்களும் வேற ஹீரோயினை வெச்சு ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டாங்க. ’யாரடி நீ மோகினி’ படம் ரிலீஸானதுக்கு அப்புறம் இயக்குநர் சுசீந்திரன் சார் படத்தைப் பார்த்திருக்கார். பார்த்திட்டு திரும்பவும் என்கிட்ட பேசினார். ’என் பட ஹீரோயின் எப்படி இருக்கணும்னு நான் நினைச்சேனோ அப்படியே நீங்க ’யாரடி நீ மோகினி’ படத்துல இருந்தீங்க. நீங்க நடிச்சால்தான் நல்லா இருக்கும் சரண்யா’னு என்கிட்ட சொன்னார். வேற ஒரு ஹீரோயினை வெச்சு ஷூட்டிங்கே ஆரம்பிச்சிட்டாலும், நாமதான் நடிக்கணும்னு கேட்கிறாரேனு அந்தப் படத்தில் நடிக்க ஓகே சொன்னேன். ’வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் நடிச்சதுக்கு அப்புறம்தான், நடிப்பை சீரியஸா எடுத்து பண்ணணும்கிற எண்ணமே வந்துச்சு. அதுவரைக்கும் இது நம்ம ப்ரொஃபஷன் இல்லைங்கிற மைண்ட் செட்டில்தான் இருந்தேன்.

சரண்யா மோகன்

இந்தப் படம் ஹிட்டானதும், இதோட தெலுங்கு ரீமேக்கில் நானிக்கூட நடிச்சேன். அந்தப் படமும் நல்ல ஹிட். அடுத்து, இதோட இந்தி ரீமேக்கிலும் நடிக்கிறதுக்கு கேட்டாங்க. இந்தியில நடிக்கிறதுக்கு முதலில் எனக்கு விருப்பம் இல்லை. அவங்க கலாசாரமே வேற, அது எனக்கு செட்டாகுமானு பயந்தேன். அப்பறம், அந்தப் படத்தோட தயாரிப்பாளர் என்கிட்ட பேசினார். ’தமிழ், தெலுங்குல நடிச்ச அதே காட்சிகள்தான் இந்தப் படத்திலேயும் இருக்கும். அந்தப் படங்களில் தாவணியில் நடிச்சீங்க; இதில் சல்வாரில் நடிக்கப்போறீங்க; அவ்வளவுதான்’னு அவர் சொன்னதுக்கு அப்புறம்தான், இந்தி ரீமேக்கில் நடிச்சேன். ஒரு படத்தோட தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு வெர்ஷனிலும் மூணு கலாசாரத்தில் நடிச்சது ரொம்பவே புதுசா இருந்தது. என் கரியரிலேயே ’வெண்ணிலா கபடிக்குழு’ படம் ரொம்ப முக்கியமானது. இந்தப் படத்தில் என்கூட நடிச்ச விஷ்ணு விஷால் இப்போவரைக்கும் எனக்கு நல்ல நண்பராக இருக்கார். தமிழ் சினிமா மூலம் எனக்கு கிடைச்ச ஒரே ஒரு நண்பரும் விஷ்ணுதான்.’’

விஜய்யின் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்தபோது நடந்த மறக்கமுடியாத சம்பவம் பற்றி சொல்லுங்க?

சரண்யா மோகன், வேலாயுதம்

’’ ‘வேலாயுதம்’ படத்தில் இரண்டு ஹீரோயின்ஸ் இருந்தாலும், என் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருந்துச்சு. அதுனாலதான் அந்தப் படத்தில் நடிக்க ஓகே சொன்னேன். இந்தப் படத்தோட கதையை இயக்குநர் மோகன் ராஜா சார் என்கிட்ட சொல்லி முடிச்சதும், ’உங்க கேரக்டர் படத்துல இறக்குற மாதிரிதான் இருக்குமானு இன்னும் முடிவு பண்ணலை. எப்படி வேணும்னாலும் மாறலாம்’னு சொன்னார். அப்போ நான், ‘சார் அந்த கேரக்டர் இறக்குற மாதிரியே இருக்கட்டும் சார். ஏன்னா, அப்போதான் அது ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆகும். அதுமட்டுமல்லாமல், நான் இதுவரைக்கும் இறந்த மாதிரி நடிச்சதேயில்லை. இந்தப் படம் நடிச்சுக்கிறேன்’னு சொன்னதும், மோகன் ராஜா சார் சிரிச்சிட்டார். ’அதை முடிவு பண்ணிட்டு சொல்றேன்’னு சொன்னார். விஜய் சார் படத்துல நான் நடிக்கிறேன்னு சொன்னதும், ’அவர் யார்கிட்டேயும் சரியா பேச மாட்டார். ரொம்ப அமைதியாத்தான் இருப்பார்’னு எல்லாரும் சொன்னாங்க. எனக்கு பயங்கர டென்ஷன் ஆகிடுச்சு. ஏன்னா, கதை கேட்கும்போது அந்த அண்ணன் - தங்கச்சி ரெண்டு பேருமே ஊருக்குள்ள அலப்பறைகள் பண்ணிட்டு இருக்கிற ஜாலியான கேரக்டர்ஸ். அப்படி இருக்கும் போது, நடிக்கிற நாங்களும் ஜாலியா பேசிக்கிட்டால்தான் நடிக்கும் போது அது இயல்பா இருக்கும். விஜய் சார் நம்மக்கிட்ட பேசாம அமைதியா இருந்தா, எப்படி அது ஸ்கிரீனில் வொர்க் அவுட் ஆகும், நல்லா நடிக்க முடியும்னு ரொம்பவே யோசிச்சேன். ஆனால், முதல் நாள் ஷூட்டிங்லேயே அதை விஜய் சார் உடைச்சிட்டார்.

சரண்யா மோகன்,விஜய்

நான் முதல் நாள் செட்டுக்கு போனதும் ரொம்ப கேரிங்கா பேசினார். அப்போ நான் விஜய் சார்கிட்ட, ‘சார் உங்களுக்கு ஞாபகம் இருக்கானு தெரியலை. நான் ’காதலுக்கு மரியாதை’ படத்துல குழந்தை நட்சத்திரா நடிச்சிருக்கேன்’னு சொன்னேன். ‘அப்படியா’னு ஷாக்கானார். முதல் நாளில் இருந்தே நல்லா பழக ஆரம்பிச்சதுனால, ஒவ்வொரு சீன் எடுக்கும் போதும் ரொம்ப நல்லா வந்துச்சு. ஸ்பாட்டில் இருந்தவங்களும், ’உங்களைப் பார்க்கும் போது உண்மையான அண்ணன் - தங்கச்சி மாதிரிதான் இருக்கு’னு சொன்னாங்க. நான் விஜய் சாரை என் அண்ணனா நினைச்சுத்தான் அந்தப் படம் முழுக்கவே நடிச்சேன்.’’

இப்போ இருக்கிற டிஜிட்டல் யுகத்தில் நடிகையாக இருந்திருக்கலாமேனு நீங்க யோசித்ததுண்டா..?

Saranya Mohan

’’ ‘நான் நடிக்கும் போது இந்த இன்ஸ்டாகிராம் இருந்திருந்தால், எனக்கும் மில்லியன் கணக்குல ஃபாலோயர்ஸ் இருந்திருப்பாங்க’னு என் கணவர்கிட்ட அடிக்கடி சொல்லுவேன். நான் நடிச்சிட்டு இருந்தப்போதான் ஃபேஸ்புக் வந்துச்சு. அதையும் நான் அதிகமா யூஸ் பண்ணவே மாட்டேன். இப்போகூட என் கணவர் சொல்லித்தான் இன்ஸ்டாகிராமிலும் டிக் டாக்கிலும் அக்கவுன்ட் ஆரம்பிச்சேன். ’நம்மளோட நடிப்பை ரசிச்சவங்க, நாம நல்லாயிருக்கணும்னு நினைச்சவங்க நிறைய பேர் இப்போ சோஷியல் மீடியாவில் இருக்கந்துனால, அவங்களுக்கு நாம எப்படி வாழுறோம் என்பதை பகிர்ந்துக்க இந்த மீடியமை யூஸ் பண்ணு’னு என் கணவர் அடிக்கடி சொல்லிட்டு இருப்பார். அதனால சோஷியல் மீடியாவில் அக்கவுண்ட் ஆரம்பிச்சு, அதன் மூலமா என்கிட்ட பேசுறவங்ககிட்டேயும் பேசிட்டு இருக்கேன். நான் என்ன பண்றேன் என்பதையும் தொடர்ந்து பதிவிட்டு இருக்கேன். அதுவும் ஒருவகையில் ஜாலியாத்தான் இருக்கு.’’

Also Read: ஓப்பன் டாக்ஸ்: சரண்யா மோகன் பார்வையில் `ட்ரோல்', லட்சுமி மேனனின் `உறுத்தல்'!

மறுபடியும் நடிக்கணும்கிற திட்டம் இருக்கா; ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துப்பீங்களா..?

Saranya mohan family

''சமீபத்தில்தான் எனக்கு ஒரு விளம்பர படத்தில் நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்தது. அந்த விளம்பரத்தில் நானும் என் ஒன்றரை வயது மகளும் சேர்ந்து நடிச்சிருக்கோம். இதுக்கப்பறம் நல்லக்கதைகள் வந்தால் நான் நடிப்பேன். ஆனால், ’பிக் பாஸ்’ மாதிரியான ரியாலிட்டி ஷோக்களுக்கு போக மாட்டேன். ஏன்னா, நான் ஃபேமிலியோடு ரொம்ப அட்டாச்சா இருக்கிற ஆள். என்னால அதிக நாள்கள் என் ஃபேமிலியை விட்டுட்டு இருக்க முடியாது.’’



source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-saranya-mohan-exclusive-interview-about-her-career

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக