Ad

சனி, 5 செப்டம்பர், 2020

ராணிப்பேட்டை: `வரதட்சணையால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!’ - தாலிகட்ட ரெடியான மாமன் மகன்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை அடுத்த ராமநாதபுரம் கீழாண்டைத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சசிகுமார் என்கிற பரசுராமன் (31). இவருக்கும், ஆற்காடு தர்மராஜா தெருவில் வசிக்கும் 25 வயதுடைய ஓர் இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்துவைக்க கடந்த ஜூலை மாதம் இருவீட்டு பெரியோர்களும் கலந்துபேசி நிச்சயதார்த்தம் செய்தனர். சீர்வரிசையாக மகளுக்கு 25 பவுன் நகை, மாப்பிள்ளைக்கு 5 பவுன் செயின், பைக் மற்றும் பண்ட பாத்திரங்கள் வழங்குவதாக பெண் வீட்டார் கூறியிருக்கிறார்கள்.

Representational Image

மாப்பிள்ளை வீட்டாரும் அதற்கு ஒப்புக்கொண்டதால், செப்டம்பர் 6-ம் தேதியான நாளை காலை ஆற்காடு மௌனகுரு மடத்தில் திருமண விழாவை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்துவந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாப்பிள்ளை பரசுராமனும் அவரது தாய் புவனேஸ்வரியும் பெண் வீட்டுக்குவந்து, ``வரதட்சணை போதவில்லை. மேலும், இரண்டு லட்ச ரூபாய், 50 பவுன் நகை கொடுத்தால்தான் திருமணம் நடக்கும்’’ என்று தடாலடியாகப் பேசியிருக்கிறார்கள்.

Also Read: `வரதட்சணை கொடுமை, கணவருடன் வாழவிடலை!’- மாமியாருக்குத் தீ வைத்த மருமகள்

அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார்,``எங்களால் என்ன முடியுமோ அதை செய்கிறோம். கடைசி நேரத்தில் இப்படி கூறுவது நியாயமா?’’ என்று கேட்டு ஆதங்கப்பட்டுள்ளனர். மாப்பிள்ளையும், அவரது தாயாரும் பிடிவாதமாக, `நீங்கள் வேறு மாப்பிள்ளைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். கவலையில் தோய்ந்துபோன பெண் வீட்டார் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் ஒன்றை நேற்று அளித்தனர்.

Representational Image

போலீஸார் விசாரணை நடத்தி வரதட்சணை கேட்ட புகாரின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாப்பிள்ளை பரசுராமனை கைதுசெய்தனர். ஒரு நாள் இருக்க திருமணம் நின்றுபோனதால், மகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனைப்பட்டு பெண் வீட்டார் கதறி அழுதனர். இதையறிந்த பெண்ணின் தாய்மாமன் தனது மகனுக்கு பெண்கேட்டு சபையில் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தாய்மாமனின் மகனும், `குறித்த நேரத்தில் தாலிகட்ட நானும் ரெடி’ என்று ஓக்கே சொல்ல திருமணம் ஏற்கெனவே குறிக்கப்பட்ட நேரத்தில் நாளை காலை நடக்கவிருக்கிறது.



source https://www.vikatan.com/social-affairs/crime/ranipet-police-arrested-youth-over-dowry-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக