திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவலர்கள் குழு, வடமதுரை அருகே உள்ள தங்கமாபட்டி பிரிவு சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர்.
Also Read: கேரளா, பெங்களூருவுக்குக் கடத்தப்படும் கஞ்சா! - தேனியில் சிக்கிய 226 கிலோ
அப்போது, அங்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், அதில் 300 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. வாகனத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி (வயது28), சோலைமுத்து (வயது 31), பரணி (வயது 33), யுவராஜ் (வயது 33), ஜெயசங்கர் (வயது 24), ராகவன் (வயது 27), பாண்டியன் (வயது 52) ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
Also Read: சிவகங்கை: காரில் இருந்த 15 பெட்டிகள்! - இரவு ரோந்தில் சிக்கிய 34 கிலோ கஞ்சா
சிறப்பாக செயல்பட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா பாராட்டு தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், தேனி மாவட்டம் வீரபாண்டியில் வாகன சோதனையின் போது 80 கிலோ கஞ்சா பிடிபட்டது. மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேனியில் இருந்து திண்டுக்கல் வழியாக, பெங்களூருவிற்கு கஞ்சா கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இந்நிலையில், தற்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் 300 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/crime/300-kg-of-cannabis-caught-in-the-truck
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக