Ad

புதன், 23 செப்டம்பர், 2020

மிஷ்கின் இயக்கும் `பிசாசு - 2' படத்தின் ஹீரோ, வில்லன் யார்?!

மிஷ்கின் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பிசாசு'. அறிமுக நாயகன் நாகா நடித்த இப்படம் ஹிட் அடித்தது. இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனமும் கிடைத்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் பார்ட் 2 எடுக்கப் போவதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்கிறார், கார்த்திக் ராஜா இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், இப்படத்தில் நடிக்கயிருக்கும் பிற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு எதுவும் வராத நிலையில் முதல் பாகத்தின் ஹீரோவாக நடித்த நாகாவிடம் பேசினேன்.

பிசாசு 2

'' 'பிசாசு' படத்துக்குப்பிறகு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. சினிமாவில் டைரக்‌ஷன் மேலதான் எப்பவும் ஆர்வம் அதிகம். அதனால், பாலிவுட் இயக்குநர் பால்கியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். அவர் அர்ஜூன் கபூரை வைத்து எடுத்திருந்த 'Ki & Ka' படத்தில் வேலைப் பார்த்திருக்கிறேன். இதற்கு பிறகு மிஷ்கின் சார் எடுத்திருந்த 'சைக்கோ' படத்தில் நாலு மாசம் வேலைப் பார்த்தேன். இப்போ, என்னோட படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகள்ல இருக்கேன். கூடிய சீக்கிரமே படத்தை டைரக்‌ஷன் பண்ற வேலைகளில் இறங்கிடுவேன். இப்போ, 'பிசாசு 2' படத்துல நான் நடிக்கல'' என்றார்.

'பிசாசு -2' படத்தின் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகமாலேயே இருக்கிறது. ஆனால், படத்தின் வில்லன் யார் என்பது இறுதிசெய்யப்பட்டுவிட்டது. 'சைக்கோ' படத்தில் நடித்த ராஜ்குமார் பிச்சுமணிதான் வில்லன்.


source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-naga-talks-about-mysskins-pisasu-2-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக