Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

திண்டுக்கல் : வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் 2 காவலர்களுக்கு கொரோனா!

ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கிறது. இந்தநிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை (தனி) ஆகிய ஏழு தொகுதிகளுக்கு உட்பட்ட 2,673 வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திண்டுக்கல் - பழனி சாலையில் அமைந்துள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 72 பேர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரதான கட்சி நிர்வாகிகளும், கல்லூரி வளாகத்தில் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், கேரளா, மேற்குவங்க மாநிலங்களைச் சேந்த இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல், பரிசோதனை செய்யவே, இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், சக வீரர்களும், திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரும் கலக்கமடைந்துள்ளனர்.

Also Read: திண்டுக்கல்: `தேன்மொழி என்றாலே தி.மு.க-வுக்கு பயம்!’ - நத்தம் விஸ்வநாதன் கிண்டல்

வாக்கு எண்ணும் மையம்

பாதுகாப்புப் பணியிலிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/2-crpf-police-tested-positive-with-corona-dindigal-vote-counting-centre

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக