Ad

புதன், 7 ஏப்ரல், 2021

கொரோனா: தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக்கொண்ட பிரதமர்... இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை! #NowAtVikatan

இந்திய பயணிகளுக்கு தடை!

கொரோனா

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு அந்நாடு தற்காலிக தடை விதித்துள்ளது. வரும் ஏப்ரல் 11 முதல் 28-ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என அந்நாட்டின் பிரதமர் ஜ்ந்சிந்தா ஆர்டன் தெரிவித்திருக்கிறார்.

2-வது டோஸ் செலுத்திக்கொண்ட பிரதமர்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும் தினமும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் மருந்தை எடுத்துக்கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் மோடி தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். பின்னர் ட்விட்டர் பக்கத்தில், ``கொரோனாவை வெற்றிகொள்ளும் வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. அதனால் தகுதியான நபர்கள், உடனடியாக தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார் மோடி.



source https://www.vikatan.com/news/general-news/08-04-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக