தமிழில் ஜெயம் ரவியுடன் கோமாளி படத்தில் நடித்தவரான சம்யுக்தா ஹெக்டே, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். உடற்பயிற்சி மீது ஈடுபாடு கொண்ட அவர், அவ்வப்போது அதுதொடர்பான வீடியோ, புகைப்படங்களை இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்வதுண்டு. அந்தவகையில் இன்ஸ்டாவில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை செய்த லைவ் வீடியோ பரபரப்பைக் கிளப்பியது.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஓடும் அந்த வீடியோவில், தானும் தனது தோழிகளும் பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் இருக்கும் அகாரா ஏரி அருகில் இருக்கும் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்தபோது, தாங்கள் அணிந்திருந்த ஆடைக்காக சிலர் தங்களைத் தாக்க முயன்றதாக கண்ணீருடன் புகார் கூறினார். மேலும், வயதான ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு அவர், உடற்பயிற்சி ஆடைகளைச் சுட்டிக்காட்டி, தங்களை காபரே டான்ஸர் போன்று சித்திரித்து வசைபாடியதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
`ஒழுங்கான ஆடைகளை அணிந்துகொண்டு வர மாட்டீர்களா? இந்த ஆடைகளுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. உடனே இங்கிருந்து வெளியேறுங்கள்’ என்று தங்களை அந்த வயதான பெண்மணி ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் சம்யுக்தா ஹெக்டே தெரிவித்தார். மேலும், போலீஸில் புகார் அளித்தபோது,
The future of our country reflects on what we do today. We were abused and ridiculed by Kavitha Reddy at Agara Lake@BlrCityPolice @CPBlr
— Samyuktha Hegde (@SamyukthaHegde) September 4, 2020
There are witnesses and more video evidence
I request you to look into this#thisisWRONG
Our side of the storyhttps://t.co/xZik1HDYSs pic.twitter.com/MZ8F6CKqjw
அவர்கள் முன்னிலையிலேயே அங்கு கூடியிருந்த சில ஆண்கள் தங்களைத் தவறாகப் பேசியதாகவும், போதைப்பொருள் வழக்கில் தன்னுடைய பெயரையும் சேர்த்துவிடுவதாகவும் மிரட்டியதாகவும் சம்யுக்தா ஹெக்டே அந்த லைவ் வீடியோவில் குற்றம்சாட்டியிருக்கிறார். போலீஸார் வரும் முன், பூங்கா கதவுகளைத் திறந்து வெளியேற முயன்றபோது சிலர், தன்னைத் தாக்கியதாகவும் அவர் கண்ணீர்மல்க தெரிவித்தார்.
போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கன்னட சினிமா நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தசூழலில் சம்யுக்தா ஹெக்டேவின் வீடியோ புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்யுக்தா ஹெக்டே புகார் தெரிவித்துள்ள அந்தப் பெண்மணி கர்நாடக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கவிதா ரெட்டி என்பது தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் நடிகை சம்யுக்தாவை கவிதா ரெட்டி மிரட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
My Version of the Events....SM Smear Campaign cannot subvert the TRUTH!
— Kavitha Reddy (KR) Jai Bhim! (@KavithaReddy16) September 5, 2020
Celebrity can use SM to make his/her narrative Trend... unfortunately Guards who did their job and Odinary people are real victims of Smear Campaign! pic.twitter.com/ddbS2cFaZc
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கவிதா ரெட்டி, நடிகை சம்யுக்தா ரெட்டியும் அவருடன் வந்தவர்களும் பூங்காவில் சத்தமாக இசையை ஒலிக்கவிட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார். இதுகுறித்து பூங்காவுக்கு தினசரி வருபவர்கள் பலர் புகார் கூறியதாகவும், அதைத் தட்டிக்கேட்கச் சென்ற பூங்கா காவலர் ஒருவரை சம்யுக்தா உள்ளிட்டோர் தாக்கியதாகவும் கவிதா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், நடிகை சம்யுக்தா மலிவான விளம்பரத்துக்காக இதைச் செய்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், சம்யுக்தாவின் லைவ் வீடியோவில், சத்தமாக இசையை ஒலிக்கவிட்டது குறித்து கவிதா ரெட்டியும் அவருடன் சேர்ந்து நடிகையை மிரட்டியவர்கள் எவரும் ஒரு வார்த்தைகூட பேசியதாகப் பதிவாகவில்லை. இந்த விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/social-affairs/controversy/attacked-and-abused-for-wearing-sports-wear-in-bengaluru-park-alleges-actress-samyuktha-hegde
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக