தமிழக பாஜக இளைஞர் அணித்தலைவர் வினோஜ் பி.செல்வம் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், `அது நிஜ துப்பாக்கி அல்ல; பொம்மை துப்பாக்கி' என்று பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 3,4 ஆகிய தேதிகளில் பா.ஜ.க இளைஞரணிக் கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம் மதுரை வந்திருந்தார்.
4-ம் தேதி நடந்த மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணிக் கூட்டதில் கல்ந்து கொண்டவருக்கு, கட்சி நிர்வாகிகள் நினைவுப் பரிசாக துப்பாக்கி.வழங்கினார்கள். அதைத் தூக்கி காண்பித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அந்த படங்களை பா.ஜ.க-வினரே சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
இந்த சம்பவத்தை தி.மு.க உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். குற்றப் பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்க்கிறார்கள் என்று தமிழக பா.ஜ.க-வை ஏற்கெனவே அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வரும் நிலையில், துப்பாக்கி விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: `ஜி’ இனி வேண்டாம்... ரௌடிகளுக்கு 4 விதிகள்... பா.ஜ.க எல்.முருகனின் பக்கா பிளான் #TNElection2021
இதுபற்றி அந்த கூட்டத்தில் முன்னணி வகித்தவரும், இளைஞரணி மாநிலச் செயலாளருமான சங்கர் பாண்டியிடம் கேட்டோம். ``ஒவ்வொரு மாவட்ட இளைஞர் அணிக் கூட்டத்திலும் மாநிலத் தலைவருக்கு நினைவுப் பரிசு வழங்குவது வழக்கம். ஏற்கெனவே திருச்சி, ராமநாதபுரம், மதுரை மாநகர் கூட்டங்களில் வீரவாள், வில் என பல பொருட்கள் நினைவுப் பரிசாக வழங்கினார்கள். அதுபோல் ஏர்கன் என்று சொல்லப்படும் விளையாட்டுத் துப்பாக்கியை தொண்டர்கள் வழங்கினார்கள்.
இதை வழங்கிய கட்சி நிர்வாகி அரசு உரிமத்துடன் ஏர்கன் தயாரிப்பவர்தான். இது ஒன்றும் தடை செய்யப்பட்ட பொருள் அல்ல. பா.ஜ.க ஒன்றும் வன்முறையை வளர்க்கும் கட்சியல்ல. எந்தக் கட்சிகளில் ரவுடிகள், வன்முறையாளர்கள் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். யாரையும் அச்சுறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. சொல்லப்போனால் பா.ஜ.க-வினர்தான் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறோம்'' என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/bjp-issues-clarification-over-viral-gun-photo-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக