புதுச்சேரி, முதலியார்பேட்டை சாலை ஞாயிற்றுக் கிழமையான நேற்று காலை பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தின் முன்புறம் ரத்தக் கறை படிந்திருந்த கத்தியை சொருகிக் கொண்டு சென்ற ஒருவரைப் பார்த்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தெறித்து ஓடினார்கள். ஆனால் அமைதியாக முதலியார்ப்பேட்டை காவல் நிலையத்தினுள் வாகனத்தைச் செலுத்திய அந்த நபர், ‘இந்தாங்க சார் கத்தி. என் பொண்டாட்டியை கொலை பண்ணிட்டேன்’ என்று கூற அதிர்ந்து போயிருக்கின்றனர் அங்கிருந்த காவலர்கள்.
புதுச்சேரி, முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயன் (58) அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (52), தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றியவர். இந்தத் தம்பதியினரின் மகள் மற்றும் மகன் கல்லூரியில் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மனைவிக்கு வரும் செல்போன் அழைப்புகளால் சந்தேகமடைந்த விஜயன், சாந்தியிடம் அதுகுறித்து கேட்க ஆரம்பித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. நேற்று காலையும் அது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மனைவி கை மற்றும் கால்களை துணியால் இறுக்கமாகக் கட்டி வீட்டிலிருந்து கத்தியால் அவரது கழுத்தை வெட்டி, அறுத்திருக்கிறார் விஜயன். அதில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்திருக்கிரார் சாந்தி.
அதன்பிறகுதான் அந்த கத்தியை தனது இருசக்கர வாகனத்தில் முன் வைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்திருக்கிறார் விஜயன். அதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், விஜயாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலியார்பேட்டை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவிடம் பேசினோம். ``மனைவிக்கு வரும் செல்போன் அழைப்புகள் மீது விஜயனுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் ‘உன்னை கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டி வந்திருக்கிறார்.
அதற்கு சாந்தியும், ’தாரளமா கொலை பண்ணிக்கங்க’ என்று கூறி வந்திருக்கிறார். அப்போதெல்லாம் மனைவியும் கை மற்றும் கால்களை கட்டி மிரட்டுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் விஜயன். சமீபத்தில் மனைவியின் பிறந்தநாளுக்கு வந்த செல்போன் அழைப்புகள் குறித்து இன்று மீண்டும் கேட்ட விஜயன், கொலை செய்துவிடுவேன் என்று கூறி சாந்தியின் கையையும், காலையும் கட்டிப் போட்டுவிட்டு கத்தியால் வெட்டியும், அறுத்தும் கொலை செய்திருக்கிறார். தற்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்” என்றார்.
source https://www.vikatan.com/news/crime/husband-killed-wife-and-surrendered-in-police-station
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக