"ஆமாம். இந்த போஸ்டருக்கே அசந்துவிட்டீர்களே... 'கொரோனாவை வென்ற கதாநாயகன்' என்றொரு விளம்பரப் படம் கன ஜோராகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் அதிகாரிகள் கையெடுத்து கும்பிட்டாலே, 'என்னை ஏங்க கும்பிடுறீங்க... நீங்க மக்களைத்தான் கும்பிடோணும்' என்று சொன்ன எடப்பாடி, இன்று ஜெயலலிதாவைப்போல தனது பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார். எடப்பாடியின் கார் டயரை எம்.சி.சம்பத் குனிந்து கும்பிட்டது, எடப்பாடியைப் பற்றி அதிக அளவில் விளம்பரங்கள் வருவது... இவையெல்லாம் இதன் பின்னணியில்தானாம்.
அ.தி.மு.க-வின் தேர்தல் செலவில், இப்படி எடப்பாடியின் விளம்பரச் செலவுக்கே பெரும் தொகை ஒதுக்கப்படும் என்கிறார்கள்" என்று டீயை உறிஞ்சியபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.
"தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், செப்டம்பர் 3-ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உங்கள் செய்தியாளர்கள் சொல்லியிருப்பார்கள். எக்ஸ்க்ளூசிவ்வாக ஒரு செய்தி சொல்கிறேன். கூட்டத்தில் பேசிய எ.வ.வேலு, 'பத்துப் பேர் கொண்ட பூத் கமிட்டியை அமைக்கலாம்' என்று ஐடியாவை முன்வைக்க, அடுத்து பேசிய செந்தில் பாலாஜி, 'பத்துப் பேர் போதாது, இருபது பேர் கொண்ட கமிட்டியை அமைக்கலாம்' எனச் சொல்ல, அதிலிருந்த சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட ஸ்டாலின், 'அதை அமைப்புச் செயலாளர் மூலம் பிறகு பேசி முடிவுசெய்யலாம்' என்று முற்றுப்புள்ளிவைத்துவிட்டாராம்."
"இதிலென்ன சூட்சுமம் கழுகாரே...?"
"சொன்னது யார் செந்தில் பாலாஜி ஆச்சே... வருகிற தேர்தல் சமயத்தில், பூத் கமிட்டி மூலம்தான் 'வைட்டமின் ப' பாயப்போகிறதாம்.
"நடக்கட்டும்... நடக்கட்டும். பா.ஜ.க செய்திகள் ஏதேனும்?"
- கழுகார் பகிர்ந்த மேலும் பல தகவல்களையும் ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக அறிய க்ளிக் செய்க... https://bit.ly/2DxoyhN > சிவகார்த்திகேயனை வளைக்கும் பா.ஜ.க! - முனைப்பு காட்டும் எல்.முருகன் https://bit.ly/2DxoyhN
மூத்தவருக்கு,
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, நம் (உங்கள்) கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் பேசிய காணொலி ஒன்றைச் சமூக வலைதளத்தில் கண்டேன். அந்தக் காணொலியில், ஒற்றை மொழி ஆதிக்கம் குறித்துப் பல மேற்கோள்களோடு ஆவேசமாகப் பேசுகிறீர்கள். இப்படி ஈழத் தமிழர்களின் உரிமைகள் குறித்து ஆவேசமாக நீங்கள் பேசிய பேச்சுகளை நம்பித்தான் நானும் நம் கட்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்தேன்.
அந்தக் காணொலியில், இந்தியாவின் பன்மைத்துவம் குறித்து அக்கறையோடு பேசினீர்கள். நாட்டின் பன்மைத்துவம் குறித்து இவ்வளவு அக்கறைப்படும் நீங்கள், நம் கட்சியில் அதைக் கடைப்பிடிக்கிறீர்களா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்!
நாம் தமிழர் எனும் கட்சியை சீமான் பிரைவேட் லிமிடெடாக (ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும்) மாற்றியதைத் தவிர இந்தப் பத்து ஆண்டுகளில் நீங்கள் நிகழ்த்திய சாதனைதான் என்ன..?
உங்களின் ரசிகத் தம்பிகள் மன்ற வேலைகளில் பிஸியாக இருக்க, நீங்களோ இணையத்திரையில் பழைய படங்களைப் பார்த்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கிறீர்கள். அது உங்கள் விருப்பம். வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி, ஆயிரம் பேரிடம் ஆயிரம் ரூபாய் எனக் கட்சி உறுப்பினர்களிடம் வசூல் செய்த தொகை என எதற்காவது கட்சியில் கணக்கு இருக்கிறதா?
- இளையவனின் முழுமையான கடிதத்தை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/31YA2UU > மாறுங்கள் சீமான்... இல்லையேல் காணாமல் போவீர்கள்! https://bit.ly/31YA2UU
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
source https://www.vikatan.com/news/politics/jv-newsbytes-on-edappadi-palanisamy-and-seeman
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக