Ad

திங்கள், 7 செப்டம்பர், 2020

ராணிப்பேட்டை: `தம்பினு கூட வச்சேன்... தப்பா நடந்துக்கிட்டான்!’ - அதிரவைத்த கொலை சம்பவம்

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரை அடுத்த மேல்வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் (27). இவரது தம்பி அசோக் (25). இருவரும் சேர்ந்து கோணிப்பை கடை நடத்திவந்தனர். அருணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அசோக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கோணிப்பை கடையில் கிடைக்கும் வருமானத்தை அண்ணனுக்குத் தெரியாமல் அடிக்கடி எடுத்துச்சென்று அசோக் இஷ்டத்துக்கு செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. அசோக்கிற்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது.

ராணிப்பேட்டை

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளார். தள்ளாடியபடி தங்களது நிலத்தில் உள்ள கொட்டகைக்குச் சென்று அங்கிருந்த கட்டிலில் படுத்துக்கொண்டார். நேற்றுகாலை பார்க்கும்போது, மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். உறவினர்கள் அவரைமீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். பரிசோதனையில், அசோக் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் இருப்பதால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினர்.

ராணிப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில், அண்ணன் அருணைப் பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். தம்பி அசோக்கை திட்டம்போட்டு கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். அருண் கொடுத்த வாக்குமூலத்தில், ‘‘குடிச்சிட்டு ஊதாரித்தனமாக சுத்திக்கிட்டு இருந்த தம்பியை பொறுப்பானவனா மாத்த நெனச்சி என் கடையில உட்கார வச்சேன். ஆனாலும், திருந்தல. கடையில இருக்கிற காசெல்லம் டாஸ்மாக்குல கரைஞ்சதுதான் மிச்சம்.

கொலை செய்யப்பட்ட அசோக்

திடீர்னு கல்யாணம் பண்ணி வைங்க. சொத்தையெல்லாம் பிரிங்கனு சொல்லி அம்மாகிட்ட சண்டைப் போட ஆரம்பிச்சான். சரி, சின்னப் பையன் தானே போகப் போக திருந்திடுவான்னு பார்த்தேன். அடிமடியில கைவச்ச கணக்கா, அண்ணினுகூட பார்க்காம என் பொண்டாட்டிக்கிட்டேயும் தப்பா நடந்துக்க பார்த்தான். இந்த கோவத்துலதான், மாடு கட்டுற கயித்தால அவன் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்’’ என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். இதையடுத்து, அருணை கைதுசெய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/youth-arrested-for-killing-brother-in-ranipet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக