வரலாறு காணாத பொருளாதார மற்றும் வர்த்தக வீழ்ச்சியை கொரோனா வைரஸ் கொண்டு வந்துள்ளது. இக்காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்பவர்களின் கவனம் பங்குச் சந்தையின் மீது திரும்பியுள்ளது. இதன் விளைவு சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளுக்குள் வந்துள்ளனர்.
இந்தத் தருணத்தில் நாளை (செப்டம்பர் 22) தொடங்க உள்ள ஏஞ்சல் புரோக்கிங் லிமிடெட் புதிய பங்கு வெளியீட்டில் (IPO) முதலீடு செய்யலாமா?
பங்கு வெளியீடு – முக்கிய விவரங்கள்
ஏஞ்சல் புரோக்கிங் லிமிடெட்
- பொதுமக்களுக்கு பங்கு வெளியீடு: 22 செப்டம்பர் 2020 அன்று ஆரம்பம்
- ₹10 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் விலைப் பட்டை: ₹305 முதல் ₹306
- பங்கு வெளியீடு 22 செப்டம்பர் 2020 அன்று ஆரம்பித்து 24 செப்டம்பர் வரை நடக்கிறது.
பொது மக்களுக்கான விற்பனையில் இந்த நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்புள்ள ஈக்விட்டி பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
குறைந்தபட்சம் 49 பங்குகள் மற்றும் அதன் பின்னர் 49 பங்குகளின் மடங்குகளில் ஏலம் எடுக்க முடியும். இந்த பங்குகள் பி.எஸ்.இ லிமிடெட் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.இ) இரண்டிலும் பட்டியலிட உத்தேசிக்கப்பட்டுள்ளன.
மொத்தப் பங்கு வெளியீட்டில் 15 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கும் (Non-Institutional Investors), 35 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் சிறு முதலீட்டாளர்களுக்கும் (Retail Individual Investors) பங்குகள் ஒதுக்கப்படும்.
இந்தப் பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து sinceresyndication.com-ன் நிறுவனர் சிவராமகிருஷ்ணன் விரிவாக விளக்கிச் சொன்னார்.
பின்னணி வரலாறு:
1996-ம் ஆண்டு எளிய முறையில் ஆரம்பித்து இன்று இந்தியாவின் மூன்றாவது பெரிய பங்குத் தரகு புரோக்கிங் நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது, ஏஞ்சல் புரோக்கிங் லிமிடெட் (Angel Broking Limited) நிறுவனம். இந்நிறுவனம் `ஏஞ்சல் புரோக்கிங்', `iTrade' மற்றும் `Angelbee' போன்ற பிராண்டுகளின் மூலமாக இந்தியாவில் உள்ளவர்களில் 96% முதலீட்டாளர்களை அணுகும் பிளாட்ஃபார்ம்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக, ஏஞ்சல் புரோக்கிங் நேர் முகமாகவும் ஃபிரான்சைஸி நெட்வொர்க் மூலமாகவும் அதிகரிக்கப்பட்ட முயற்சியுடன் கஸ்டமர் அக்குவிசிஷன் ஸ்ட்ராடஜி-ஐ செயல்படுத்தி வருகிறது. ஒரு நிறுவனத்தின் வெற்றி, அதன் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தொலைநோக்கு சிந்தனை உடையவர்களாகவும் அதை செயல்படுத்தும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பதில்தான் உள்ளது. அவ்விதத்தில், இன்று மிக வேகமாகப் பிரபலமடைந்து வரும் `டிஸ்கவுன்ட் புரோக்கிங்' எனும் குறைந்த கட்டணங்கள் உடன் செயல்படும் புரோக்கிங் சர்வீசில் ஏஞ்சல் புரோக்கிங் ஒரு வருடத்துக்கு முன்னரே முதலீடு செய்துவிட்டது.
ஐ.பி.ஓ.வில் முதலீடு செய்ய வேண்டிய காரணங்கள்:
ஏஞ்சல் புரோக்கிங்கில் ஏன் முதலீடு செய்யலாம் என்பது குறித்து காண்போம்.
1. இன்று, சராசரி இந்தியர்களின் சேமிப்பு முறை உருமாறி வருகிறது. நிலத்திலும் தங்கத்திலும் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் மட்டும் பணத்தை முதலீடு செய்துவந்த இந்தியர்கள், இன்று பங்குச் சந்தையில் முதலீடு செய்யவும் முனைந்து வருகின்றனர். இதை நிதிச் சேமிப்பு (financial saving) என்று கருதுகிறோம். அந்த அடித்தளத்தில் ஏற்படும் மாற்றத்தினால், பெரிய அளவு நன்மை அடையக்கூடிய நிறுவனங்களில் ஒன்று ஏஞ்சல் புரோக்கிங் ஆகும்.
2. நிதிச் சேவை (ஃபைனான்சியல் சர்வீசஸ்) இண்டஸ்ட்ரியில் விரிவான பல்வேறு வகையான சேவைகளை கொண்டது ஏஞ்சல் புரோக்கிங். அதன் செயல்பாடுகள் அவையாவன:
புரோக்கிங்,
பங்கு ஆராய்ச்சி,
பங்கு அடமானக் கடன்,
மியூச்சுவல் ஃபண்டுகள் விநியோகம் மற்றும் முதலீட்டு ஆலோசனை.
3. புதிய கிளையன்ட் சேர்க்கையில் முன்னோடியாக விளங்கும் ஏஞ்சல் புரோக்கிங் 2020 ஜூன் 30 வரை சுமார் 79.55 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களை அணுகியுள்ளது. டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கொண்டு 2017-18-ல் 1.06 மில்லியனாக இருந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை 2.15 மில்லியனாக அதாவது ஆண்டுக்கு 36.81% சராசரி வளர்ச்சி (CAGR) என்னும் அதிகமான விகிதத்தில் வளர்த்துள்ளது.
4. இத்தகைய வளர்ச்சி தொடர்கிறதா என்பதை பார்ப்போமா?
Q1 FY20 முதல் Q1 FY21 வரை, அதன் சராசரி தினசரி வருவாய் ரூ. 253,176 மில்லியன் முதல் ரூ. 618,945 மில்லியனாக அதிகரித்துள்ளது. மேலும் Q1 FY21-இல் 1.15 லட்சம் முதலீட்டாளர்களைத் தங்கள் பக்கம் சேர்த்துள்ளது. இது தனது சராசரி வளர்ச்சியைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். இது வியக்கத்தக்க வளர்ச்சியாகும்!
5. ஏஞ்சல் புரோக்கிங்கில் ஏற்பட்ட டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் டிரைவ் (digital transformation drive) பலத்தினால், Q1 - FY21-ல் புதிய முதலீட்டாளர்கள் சேர்க்கும் பட்டியலில் இந்தியாவில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது இந்நிறுவனம். இந்நிறுவனம் புரோக்கிங் இன்டஸ்ட்ரியல் சிறந்த நிறுவனம் என்பதற்கு இது குறிப்பாகிறது.
6. கடந்த மூன்று ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) அறிமுகம் மற்றும் ஐ.எல்.எஃப்.எஸ் (ILFS) நிறுவனத்தின் மூலம் ஏற்பட்ட நிதி தேக்க நிலையால் பெரும்பாலான புரோக்கிங் நிறுவனத்தின் வருமானம் தேக்க நிலையில் இருந்தது.
மேலும் அதிகப்படியான வர்த்தக செலவின் காரணத்தினால் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் லாபமானது சற்று குறைந்து இருப்பினும், கடந்த ஜூன் காலாண்டில் வருமானம் மற்றும் லாபம் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும், இந்நிலை தொடருமாயின் 2019-21-ம் நிதியாண்டில் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் சுமார் ரூ. 180 கோடி முதல் 200 கோடி வரை லாபம் ஈட்டலாம்.
7. அவ்வாறு ரூ. 200 கோடி லாபம் ஈட்டினால் இந்நிறுவனத்தின் FY21 பி.இ விகிதம் 14x முறை ஆகும். மற்ற புரோக்கிங் நிறுவனங்களின் FY 21 பி.இ ரேஷியோ 13x முதல் 24x வரை உள்ள நிலையில், ஏஞ்சல் புரோக்கிங் பங்கு விலையை அதிகமானது அல்ல என்று கருதுகிறோம்.
source https://www.vikatan.com/business/investment/an-expert-analysis-on-angel-broking-ipo-opening
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக