இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,48,318 -லிருந்து 5,66,840 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், 24 மணி நேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,475-லிருந்து 16,893 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822 ஆகவும் உயர்ந்துள்ளது. 2,15,125 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள்.
உலக அளவில் கொரோனா பாதிப்பு!
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,38,232-லிருந்து 1,04,02,637 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55,49,897 -லிருந்து 56,48,728 ஆக உள்ளது. தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,04,078 -லிருந்து 5,07,518 ஆக உயர்ந்திருக்கிறது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு!
உலக அளவில், கொரோனா காரணமாக அதிக பாதிப்புகளை சந்திக்கும் நாடான அமெரிக்காவில், கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 26,81,775 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,28,777ஆக உள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/3062020-corona-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக