Ad

திங்கள், 29 ஜூன், 2020

`வீடியோவில் போலீஸை எட்டி உதைக்கிறது நான் இல்லை..!' -வாகை சந்திரசேகர்

வேளச்சேரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான வாகை சந்திரசேகர், நேற்று இரவில் இருந்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த வீடியோவில் இருப்பவர், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்து, ஒரு காவல் அதிகாரியை எட்டி உதைப்பதுபோல் இருக்கிறது. மேலும், வீடியோவில் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பவர், காவலர் ஒருவரைப் பார்த்து மோசமாகப் பேச, தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.

வாகை சந்திரசேகர்

வீடியோ குறித்து வாகை சந்திரசேகரிடம் பேசினோம்.

``நான் வேட்டி சட்டைலாம் போடுறதே எப்போவாவதுதான். பேன்ட், சட்டைதான் எனக்கு வசதியான உடை. எனக்குமே இந்த வீடியோ நேத்து அனுப்பிவெச்சாங்க. என் பேரையும் தி.மு.க மற்றும் தளபதி பேரையும் டேமேஜ் பண்ணணும்கிற நோக்கத்தோடு திட்டமிட்டு இதுபோன்ற வேலைகளைச் செய்றாங்க. பரப்பிவிடுறவங்களோட நோக்கம், கொரானா தடுப்புப் பணியில் எக்காரணம் கொண்டும் தி.மு.க-வுக்கு நல்ல பெயர் கிடைச்சிடக்கூடாதுன்றதுதான்.

எனக்குத் தெரிய, அந்த வீடியோல இருக்கிறவர் பேரு அர்ஜுனன். அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி-யாம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்துக்காரர்னு சொன்னாங்க. உண்மை இப்படி இருக்க, என் பேரை ஏன் இழுத்து விட்டாங்கன்னு தெரியலை. அதனால இப்ப காவல்துறையில புகார் கொடுக்க கிளம்பிட்டிருக்கேன்'' என்றார் சந்திரசேகர்.



source https://www.vikatan.com/news/politics/the-politician-who-is-threatening-the-police-is-ex-admk-mp-explains-vaagai-chandrasekar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக