Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

``வெங்கட் பிரபு நல்ல நண்பன்... ஆனா, அவன் படத்துல என்னை?!'' - யுகேந்திரன் வாசுதேவன்

மலேசியா வாசுதேவனின் 75-வது பிறந்தநாள் விழாவை அவரின் மகனும் பாடகரும் நடிகருமான யுகேந்திரன், நியூசிலாந்தில் இருந்தபடியே ஸூம் வழியே நிகழ்த்தியிருக்கிறார். யுகேந்திரனிடம் பேசினேன்.

``உங்கள் அப்பாவின் ரிக்கார்டிங் நாள்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?"

``அப்பா எந்த ரிக்கார்டிங் போயிட்டு வந்தாலும், அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசுவார். எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பார். ஒரு பாட்டு பாடப் போனார்னா, அந்தப் பாட்டு ரிக்கார்டிங் முடியுறவரைக்கும் அங்கேயே இருந்து, அந்தப் பாட்டோட ஒரு காப்பியையும் வாங்கிட்டு வந்துடுவார். லேட் ஆகும்னு தெரிஞ்சா, ரெண்டு நாள் கழிச்சு என்னை அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்லுவார். இதுதான் எங்களுக்கான என்டர்டெயின்மென்ட். ஏன்னா, அப்போவெல்லாம் தூர்தர்ஷன் சேனலைவிட்டா, வேற சேனல் கிடையாது. அந்த நேரத்துல பாட்டு கேசட்தான் எங்க பொழுதுபோக்கு. அப்பா பாடுற பாடல்களை எல்லாம் ரிலீஸுக்கு முன்னாடியே கேட்கிறதுல அப்படி ஒரு சந்தோஷம். நான் பத்தாவது படிச்சி முடிச்சதுக்கு அப்புறம் ஸ்கூல் போறதை நிப்பாட்டிட்டேன். அப்பாக்கூட ரிக்கார்டிங் கிளம்பிடுவேன். அப்படித்தான் எனக்கு சின்ன வயசுலேயே நிறைய இசையமைப்பாளர்கள், இயக்குநர்களோட நட்பு கிடைச்சது. அதுதான் என்னைப் பாடகராவும் நடிகராவும் மாத்திச்சு.''

Malaysia Vasudevan, SPB, LR Eswari, Susheela

``அப்பா பாடகர்ன்றதாலா சினிமாவுக்குள்ள உங்களால் ஈஸியா வர முடிஞ்சதா?''

``எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமால நடிகராகணும்னு ஆசை இருந்தது. ஆனா, அது அப்பா சினிமால இருந்திருந்தாலும் ஈஸியா நடக்கல. முதன்முதல்ல நடிகர்களா நானும் வெங்கட்பிரபும் சேர்ந்து நடிச்ச `பூஞ்சோலை' படம் ரிலீஸாகவே இல்ல. அதுக்கப்புறம் நான், வெங்கட் பிரபு, சரண்னு மூணு பேரும் சேர்ந்து அகத்தியன் சார் டைரக்‌ஷன்ல `காதல் சாம்ராஜ்ஜியம்’னு ஒரு படத்தில் நடிச்சோம். அதுவும் ரிலீஸாகலை. இந்தப் படத்தோட பாடல்கள் எல்லாமே செம ஹிட். இந்தப் படத்தோட கான்செப்ட் இப்போ பார்த்தாலும் புதுசா இருக்கும். ரொம்ப நல்ல படம். சுப்பு பஞ்சு அண்ணாதான் தயாரிப்பாளர். எப்போ அவர்கிட்ட பேசினாலும் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணுங்கனு கேட்பேன். அந்தளவுக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் இது.

நீங்க சொல்ற மாதிரி என்னையும் வெங்கட் பிரபுவையும், சரணையும் பார்க்கிறவங்க, `உங்க அப்பால்லாம் சினிமால இருக்காங்க. உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லைல்ல’னு கேட்பாங்க. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நாங்களும் பல கஷ்டங்களை சந்திச்சுதான், சினிமாக்குள்ள வந்தோம். ஜெயிக்கிறதுக்கும் பல கஷ்டங்கள் பட்டுக்கிட்டிருக்கோம்.’’

``நீங்களும் வெங்கட் பிரபுவும் நல்ல நண்பர்கள். ஆனால், வெங்கட் பிரபுவோட படங்களில் நீங்க நடிக்கலையே, ஏன்?''

Raguvaran, Yugendran

`` `சென்னை-28’ படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் வரைக்கும் நான் அவங்ககூடத்தான் இருந்தேன். ஏரியாக்குள்ள கிரிக்கெட் ஆடிட்டு இருந்த பசங்களை அழைச்சுக்கிட்டு வந்து ஆடிஷன் பண்ணது நாங்கதான். ஜெய் நடிச்ச கேரக்டருக்கு முதல்ல யாரை நடிக்க வைக்கலாம்னு பேசிட்டு இருந்தப்போ நான்தான் வெங்கட் பிரபுகிட்ட ஜெய் பேரை சொன்னேன். ஏன்னா, `பகவதி’ படத்துல என்கூட ஜெய் நடிச்சிருந்தான். `பார்க்கிறதுக்கு விஜய் மாதிரி இருப்பான். நம்ம சம்பத் அண்ணா பையன்டா’னு சொல்லி அவனை படத்துக்குள்ள கொண்டு வந்தேன். நிதின் சத்யாவும் என்னோட ஃபிரெண்ட்தான். அவனையும் படத்துக்குள்ள கொண்டு வந்தேன். ஆனால், படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். என்னால அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போயிடுச்சு. அப்புறம் வெங்கட் பிரபுவோட அடுத்தடுத்த படங்கள்ல நான் நடிக்கிற மாதிரி சூழல் வரும்; அப்புறம் மிஸ்ஸாகிடும். இது தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கு. இப்போ `மாநாடு’ படத்தில்கூட எனக்கு ஒரு கேரக்டர் இருந்துச்சு. அதுவும் கடைசி நேரத்தில் மாறிடுச்சு. நானும் சினிமாவுல இருந்ததுனால, உள்ளுக்குள்ள என்னென்ன வேலைகள் நடக்கும்னு தெரியும். வெங்கட் பிரபுவுக்கு என்னை நடிக்க வைக்கணும்னு ஆசை இருந்தாலும், மத்தவங்க ஏதாவது ஒண்ணு சொல்லுவாங்க. அப்படித்தான் இந்த வாய்ப்புகள் எல்லாமே மிஸ்ஸாகிப்போகுது. எனக்கு நடிக்கிறது ரொம்ப பிடிக்கும். அதனால, அவன் எப்போ கூப்பிட்டாலும் நடிக்கப் போய்டுவேன்.’’



source https://cinema.vikatan.com/tamil-cinema/yugendran-vasudevan-speaks-about-his-cinema-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக