Ad

வியாழன், 29 செப்டம்பர், 2022

``விலையேற்றம்தான் திமுக-வின் `ஆட்சி' மாடல்!" - சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி காட்டம்

மின்கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் சிவகாசியில் நேற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்துக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். இதில், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள், கழக உறுப்பினர்கள் உட்பட பல கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ``தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அத்தியாவசியப் பொருள்கள் முதல் அனைத்துப் பொருள்களின் விலையும் ஏறிவிட்டது. தீப்பெட்டி தொழிலாளர்களும், பட்டாசு தொழிலாளர்களும் விலையற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தி.மு.க என்றாலே விலையேற்றம்தான். விலையேற்றம்தான் தி.மு.க-வின் ஆட்சி மாடல். ஆனால் அ.தி.மு.க உழைப்பாளர்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய கட்சி. பிழைத்துக்கிடப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை தரக்கூடிய கட்சி தி.மு.க. தமிழ்நாட்டின் நலனுக்காகவும், விருதுநகர் மாவட்ட மக்களின் நலனுக்காகவும் மக்கள் கேட்க... கேட்க எண்ணற்ற பல திட்டங்களைத் தந்தவர் எடப்பாடி பழனிசாமி.

பொதுக்கூட்டம்

பட்டாசு தொழிலுக்கு தடை வந்தபோது தொழிலாளர் சங்கத்தினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அ.தி.மு.க தனியாகவே நின்று பட்டாசு தொழிலாளர்களுக்காக வழக்கறிஞரை நியமித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியது. இது பட்டாசு தொழிலாளர்களுக்கும் தெரியும். எம்.ஜி.ஆரின் வழியில் வந்த அ.தி.மு.க-வினருக்கு தவறு செய்யும் எண்ணமே வராது. தவறுசெய்பவர்களைக்கூட அன்பால் தட்டிக்கொடுத்து அரவணைத்துச் செல்லும் கட்சிதான் அ.தி.மு.க. ஆனால் குறை கண்டுபிடித்தே பெயர் வாங்க நினைப்பவர் மு.க.ஸ்டாலின்.

மாநில நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள், புதிய மேம்பாலங்கள் என அனைத்து சாலைகளும் அ.தி.மு.க ஆட்சியில் சீரமைக்கப்பட்டன. மேலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இன்று தமிழ்நாட்டில் நிறைய தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. காரணம் தொழில் நிறுவனங்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்படும் அழுத்தமும் நிர்பந்தமும்தான். இந்த அழுத்தமும் நிர்பந்தமும் அ.தி.மு.க ஆட்சியில் என்றைக்கும் கொடுக்கப்பட்டது கிடையாது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-ex-minister-rajendra-balaji-slams-dmk-govt-at-sivakasi-party-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக