Ad

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

புதுக்கோட்டை: பணப்பட்டுவாடா புகார்.. அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் அதிரடி சோதனை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மற்றும் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பாவதைத் தடுத்து அவற்றைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு முதல் நிலை ஒப்பந்ததாரருமான சோத்துப்பாளை முருகேசனின் எழில்நகர் வீட்டில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார் சென்றது. இதனை தொடர்ந்து தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் மீனாள் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு, டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

சோத்துப்பாளை முருகேசனின் வீட்டின் ஒவ்வொரு அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது காரிலும் சோதனை நடந்தது. இதில், கணக்கில் வராத ரூ2.53 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். இதேபோல், அன்னவாசல் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சாம்பசிவத்தின் அன்னவாசல் வீட்டில் சோதனை மேற்கொண்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் கணக்கில் வாரத ரூ.1.51லட்சம் பணத்தையும் கட்சி கரைவேட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

கொடும்பாளூரில் பறக்கும்படை மேற்கொண்ட சோதனையில் அ.தி.மு.க நிர்வாகி சிவசாமி என்பவரது வீட்டில் ரூ.1.44 லட்சம் கைப்பற்றப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணனின் உதவியாளர் வீரபாண்டி வீட்டில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.49லட்சம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-pudukottai-minister-vijayabaskar-friend-and-supporters-houses-raided

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக