Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

'கிரிக்கெட் ஆட தெரியாது.. ஆனால் பி.சி.சி.ஐ செயலாளர்' - அமித் ஷா மகனை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “மத்திய அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷாவுக்கு, 2016-19 காலகட்டத்தில் சொத்து மதிப்பு 15,000 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 32 வயதான ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக உள்ளார். ஆனால், கிரிக்கெட் ஆட தெரியாது. இவர் அந்தப் பதவிக்கு சென்றபிறகு, கங்குலியை பா.ஜ.க-வில் சேர சொல்லி மிரட்டினர்.

உதயநிதி ஸ்டாலின்

Also Read: உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சு... கொதித்த சுஷ்மா, அருண் ஜெட்லி மகள்கள் - என்ன பிரச்னை?

அதனால்தான், கங்குலிக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் படுத்துவிட்டார். ஜெய் ஷா நடத்தும் எந்த நிறுவனத்துக்கும் முறையாக வரி கட்டாமல் இழுத்து மூடிவிட்டனர். குஜராத்தில் அமைச்சராக இருந்து போலி என்கவுன்டர் வழக்கில் கம்பி எண்ணினவர்தான் அமித் ஷா. தைரியம் இருந்தால் சவாலுக்கு வாங்க.

என் சொத்துகளை எல்லாம் உங்கள் பையன் பெயரில் எழுதி வைக்க நான் தயார். உங்க மகன் சொத்துகளை எல்லாம் என் பெயரில் எழுதி வைக்க தயாரா?. தோல்வி பயத்தில் ரெய்டு நடத்தி பயமுறுத்த நினைக்கிறார்கள். இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் எங்கள் கிளை கழக செயலாளர்கள் கூட அஞ்ச மாட்டார்கள். ஒரு இட்லி ஒரு கோடி ரூபாய், ஒரு செங்கல்தான் மொத்த எஸ்ம்ஸ் மருத்துவமனையும்.

உதயநிதி ஸ்டாலின்

நான் சுஸ்மா ஸ்வராஜ், அருண்ஜெட்லி குறித்து தவறாக பேசியதாக பா.ஜ.க புகார் அளித்துள்ளது. நான் யாரையும் தவறாக பேசவில்லை. நான் குறுக்குவழியில் வந்துவிட்டதாக மோடி விமர்சித்தார். பா.ஜ.க-வில் பல தலைவர்களை ஓரம்கட்டி வந்தவர்தான் மோடி என்று நான் சொன்னேன். அவர்களை நான் அவதூறாக பேசிவில்லை.

தேர்தலில் நேரடியாக போட்டியிட்டால் பா.ஜ.க-வால் ஒரு கிளை கழக செயலாளரை தொட்டுக் கூட பார்க்க முடியாது. அதனால்தான் குறுக்கு வழியில் வந்து என்னை தகுதி நீக்கம் செய்ய பார்க்கின்றனர். எனவே, ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் எதிர்தரப்பு வேட்பாளரை மோடியாகக் கருதி களப்பணியாற்றி தோற்கடிக்க வேண்டும். அடுத்த மூன்று நாள் முக்கியம். எல்லோரும் தெளிவாக, பொறுப்பாக இருந்து களப்பணியாற்ற வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின்

அதன்பிறகு ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கலாம். பொட்டியை நாங்க பார்த்துக்கறோம். அ.தி.மு.க காரங்க கோடி கோடியா கொள்ளையடிச்சு வெச்சுருக்காங்க. கண்டிப்பா காசு கொடுப்பாங்க. அப்படி காசு கொடுத்தா வாங்கிக்கங்க. ஆனா, எங்க சின்னத்துக்கு வாக்களிங்க” என்றார்.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஜீனியர் விகடன் இதழில், ஊராட்சி அமைப்புகள், பினாயில் முதல் பிளீச்சிங் பவுடர் வரை ஒவ்வொரு பொருளையும் பல மடங்கு விலை கொடுத்து வாங்கியதை ஆதாரத்துடன் எழுதியிருந்தோம். இந்நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் பரப்புரையின் போது, உதயநிதி ஸ்டாலின், அந்தப் பொருள்களை எடுத்து காண்பித்து அந்த ஊழல் குறித்து மக்களிடம் பேசினார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/dmk-udhayanidhi-stalin-trolls-jaisha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக