Ad

திங்கள், 5 ஏப்ரல், 2021

பூத் ஏஜென்ட் என்றால் யார்... தேர்தலில் அவர்களின் பணி என்ன? - முழுமையான தகவல்!

ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவதில் முனைப்பு காட்டுவார்கள். அதே நேரத்தில் தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கக்கூடாது என்பதில் அக்கறையுள்ளவர்கள் பூத் ஏஜென்ட்டுகளை தங்கள் வாக்குசாவடியில் நியமிக்கும் அதிகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி இருக்கிறது. அதற்கு சில நடைமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

பூத் ஏஜென்ட்டின் தகுதிகள் என்ன?

எழுதப்படிக்கத் தெரிந்தவராக இருப்பதும், EVM பற்றிய அடிப்படை அறிவு இருப்பவராகவும் பூத் ஏஜென்ட் இருக்க வேண்டும். கண்டிப்பாக அரசாங்க ஊழியராக இருக்கக்கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில் யாரேனும் புகாரளித்து கண்டுபிடிக்கப்பட்டால், சிறைதண்டனையும் அபராதமும் உண்டு. வாக்காளர் பட்டியலில் பெயர் இருத்தல் வேண்டும். அதே வாக்குச் சாவடியில்... அதிலும் அவர் அமரும் அறையிலேயே வாக்களிப்பவராக இருந்தால் கூடுதல் நலம்.

பூத் ஏஜென்ட்

பூத் ஏஜெண்டுகள் எத்தனை பேரை நியமிக்கலாம்?

ஒரு பூத்துக்கு உள்ளே ஒருவரும் வெளியே ஒருவரையும் குறைந்த பட்சம் அமைக்கலாம். வெளியே இரண்டு பேர் வரை அதிகபட்சமாக ஏஜென்ட்டுகளாக நியமிக்கலாம். ஆனால், கண்டிப்பாக பூத்துக்கு உள்ளே ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பூத் ஏஜென்ட்டை நியமிக்கும் முறை:

*வேட்பாளர் அல்லது வேட்பாளரால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட்டுகளால் தான் பூத் ஏஜென்ட்டை நியமிக்க முடியும்.

*ஃபார்ம் 10 விண்ணப்பப் படிவத்தை வேட்பாளர் அல்லது ஏஜென்ட் கையெழுத்தோடு பூத் ஏஜென்ட் கையெழுத்திட்டு தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.

* போஸ்டல் வாக்கு அளிப்பவராக இருந்தால் 10 நாட்களுக்கு முன் கடிதம் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நடக்கும் அன்று கடிதம் கொண்டு போனால் போதும்.

பூத் ஏஜென்ட் தேர்தல் நாளன்று என்னெல்லாம் செய்ய வேண்டும்?

* தேர்தல் நாளன்று வாக்குப்பதிவுக்கு ஒருமணிநேரம் முன்பே வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும்.

* ஃபார்ம் 10 என்ற விண்ணப்பப்படிவத்தையும், ஏஜென்ட் அல்லது வேட்பாளர் கையெழுத்திட்ட பூத் ஏஜென்ட் நியமனக் கடித்ததையும் கொண்டு செல்ல வேண்டும்.

* பூத்திலிருக்கும் அதிகாரியிடம் கொடுத்து உடனடியாக பூத் ஏஜெண்டாக தன்னை பதிவு செய்து கொண்டு அவர் வழங்கும் 'நியமன அட்டை'யை பெற்றுக் கொள்ள வேண்டும். அதைக் கடைசிவரை பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

*அதிகாரிகள் கேட்கும் போது நியமன அட்டையைக் காட்ட வேண்டும். அட்டை தொலைந்திருந்தால் வெளியேற்றப்படுவார்கள்.

* மாற்று ஏஜெண்டும் காலையிலேயே சென்று நியமன அட்டையை பெறுவது அவசியம். மாற்று ஏஜென்ட் பூத்துக்குள் இருக்க்கக்கூடாது. மாற்றும்போது மட்டுமே உள்ளே வரலாம். மாற்று ஏஜென்ட் ஆபத்துக் காலத்தில் உதவுபவர் மட்டுமே. உள்ளே இருப்பவர்கள் தான் முக்கியமான ஏஜென்ட் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

* கைப்பேசி, புகை பிடிப்பது, அரட்டை அடிப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது.

* கண்டிப்பாக மது அருந்தியிருக்ககூடாது!

பூத் ஏஜென்ட் கைகளில் அவசியம் இருக்க வேண்டியவையும்... செய்ய வேண்டியவையும்:

*அவர் அமர்ந்திருக்கும் பூத்தின் மொத்த வாக்காளர் பட்டியல் அடங்கிய புத்தகம். அதை பூத் ஏஜென்ட்தான் வேட்பாளர் உதவியுடன் தயாராக வைத்திருக்க வேண்டும்.

* பேனா, பென்சில் ஏ4, இயந்திரத்தை சீல் வைக்க பயன்படும் சீல் போன்ற ஸ்டேஷனரி பொருட்களை வைத்திருப்பது நலம்.

* வாக்குப்பதிவு முடியும்வரை வெளியே எதையும் எடுத்துச் செல்லக்கூடாது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதை உணர வேண்டும்.

* எங்கே பூத்துக்குள் நாற்காலியில் அல்லது இடத்தில் அமர்கிறாரோ கடைசிவரை தனக்கான இடத்தில் தான் பூத் ஏஜென்ட் அமர வேண்டும்.

* வாக்களிப்பவர்கள் சரியானவரா என கண்காணிக்கலாம்.

* எத்தனை வாக்குகள் பதிவாகிறது என நோட் செய்ய வேண்டும்.

பூத் ஏஜென்ட்

* உங்கள் கணக்கு, தேர்தல் அதிகாரி கணக்கு, இயந்திரக்கணக்கு ஆகியவை சரியாக்றைருக்கிறதா என செக் செய்து கொள்ள வேண்டும்.

* வாக்குப்பதிவுக்கு முன் EVM இயந்திரத்தில் வாக்குகள் எதுவும் முன்பே பதிவாகவில்லை என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க வேண்டும்.

* முறைகேடுகள் நடப்பது போல் தெரிந்தால் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகாரளிக்க வேண்டும்.

* வாக்குப்பதிவுக்குப் பின் இயந்திரம் முறையாக சீலிடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* சரியான வாக்கு இயந்திரங்கள்தான் சீலிடப்பட்டு அரசு வாகனத்தில் ஏற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்!

Also Read: அதிமுக., திமுக கட்சிகளின் பலமான பூத் ஏஜென்ட், பூத் கமிட்டி! - இவை பற்றிய விரிவான தகவல்



source https://www.vikatan.com/news/election/who-is-booth-agent-what-was-hisher-role-in-polling-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக