நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் மிரட்டி தொடங்கியிருக்கிறது. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, தலைநகர் சென்னையை அடுத்து, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
Also Read: இரவு நேர ஊரடங்கு பயனளிக்குமா? - மோடி வலியுறுத்தும் `கொரோனா லாக்டெளனின்' அவசியம் என்ன?
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாஸ்க் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது. கடந்தாண்டு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தபோது, கோவை கொடிசியா வர்த்தக மையத்தின் ஒரு பகுதி சிகிச்சைக்காக வழங்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், கொடிசியா மையத்தின் ஹால் டி, கொரோனா சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால், தடுப்பூசி போடுவதற்காக ஆங்காங்கே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்கள் கூடி வருகின்றனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் 3,059 பேர் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் கோவை மாவட்டத்தில் புதிதாக 473 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கருப்பண்ண கவுண்டர் வீதி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள மற்ற வீடுகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் கூட்டம் அதிகம் இருப்பதால், அது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கருப்பண்ண கவுண்டர் வீதி பகுதியை கோவை மாநகராட்சி ஆணைர் குமரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-corona-report-action-in-progress
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக