Ad

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

கொரோனா: `1,03,558’ - இந்தியாவில் முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்த ஒருநாள் பாதிப்பு! #NowAtVikatan

கொரோனா பாதிப்பு: புதிய உச்சம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலையாக தற்போது பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 1,03,558 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.

முன்னதாக கடந்த ஆண்டு செப் 17 -ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 98,795 பாதிப்புகள் பதிவாகி இருந்தது குறிப்பிடதக்கது.

கொரோனா

இதுவரை இந்தியாவில் 1,25,89,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,16,82,136 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துருக்கிறார்கள். தற்போது 7,41,830 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் 1,65,101 பேர் கொரோனா நோய் தாக்கத்தால் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 478 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகி உள்ளனர். இந்தியாவில் இன்று வரையில் 7,91,05,163 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/general-news/05-04-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக