`ஏகப்பட்ட Game..வேல்டு புல்லா Name’
தமிழகம் முழுவதும் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும்விதமாக அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றன. தேனியில் விஜய்யை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆராகச் சித்திரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதுதொடர்பான கேள்விக்கு, நடிகர் விஜய், எம்.ஜி.ஆராக முடியாது என அமைச்சர் ஜெயக்குமாரும் பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில், நடிகர் விஜய்யை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரோடு ஒப்பிட்டு மதுரையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அதில்,` பல சதியால் நடந்தது இவங்களுக்கு ஏகப்பட்ட Game.. சரி விடுங்க அதனாலதான் இவங்களுக்கு வேல்டு புல்லா Name'என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது.
Also Read: ``விஜய் சார் ஷூட்டிங்ல பேசாமலே இருந்தா எப்படி நடிக்கமுடியும்?!'' - சரண்யா மோகன்
அதேபோல், `அடிமைகள் ஆட்சியை அகற்ற கைகள் இணையட்டும்... தமிழகத்தை வெல்லட்டும்... மறப்போம் மன்னிப்போம்’ என்ற வாசகத்துடன் மு.க.ஸ்டாலின் - மு.க. அழகிரி ஆகியோர் இணைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை தி.மு.க-வினரும் நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள்.
Also Read: `மண்டலப் பதவி; சீனியர்களுக்குப் புதிய பொறுப்பு!'- தி.மு.க பொதுக்குழுவின் பின்னணி
இந்தியாவில் கொரோனா - அப்டேட்ஸ்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 41,13,811 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 90,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,626 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், 24 மணி நேரத்தில் 73,642 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 31,80,865 ஆகவும் உயர்ந்துள்ளது.
Also Read: `பாசிட்டிவா... நெகட்டிவா?' - கோவை மாநகராட்சி கொரோனா குளறுபடி!
source https://www.vikatan.com/news/general-news/06-09-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக