Ad

சனி, 5 செப்டம்பர், 2020

``நமக்கான காரை நாமே வடிவமைப்போம்!'' - டாப் டிசைனர் சத்தியசீலன்

''நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களுக்கும் அடிப்படை ஒன்று உண்டு; அது டிசைன். உளுந்து வடை என்றால் நடுவே ஓட்டை இருக்க வேண்டும்; தோசை என்றால் வட்டமாக இருக்க வேண்டும் என்பதும் ஒரு டிசைன் கோட்பாடுதான். தோசை, வடைக்கே இப்படி என்றால், கார்களுக்கு? கார் டிசைனிங் கோர்ஸ்னு ஒண்ணு இருக்கு தெரியுமா? ஆம், கார் டிசைனுக்கு என்று தனிப்படிப்பு இருக்கிறது; அதற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கார் டிசைனுக்கு என்று நிறுவனங்கள் தங்கள் பட்ஜெட்டில் பல கோடிகளை ஒதுக்குகின்றன’’ என்கிறார் அசோக் லேலாண்டின் டிசைன் பிரிவுத் தலைவரும், இந்தியாவின் டாப் டிசைனர்களில் ஒருவருமான சத்தியசீலன்.

நீங்கள் சாலையில் பார்க்கும் ஆட்டோக்கள், பல நிஸான் கார்கள், டாடா கார்கள், அசோக் லேலாண்டின் ட்ரக்குகள், பஸ்கள், LCV-க்கள் என்று பல வாகனங்கள் இவரின் கைவண்ணத்தில் உருவானவை. சத்தியசீலன், சுத்தத் தமிழன். ஒரு தமிழரின் கைவண்ணத்தில் உருவாகும் கார்கள் சாலையில் ஓடுகின்றன என்பது பெருமைதானே!

Car Design Workshop

கார் டிசைன் என்றாலே இந்தியர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நினைப்பதற்குக் காரணம், நம் இந்திய மாணவர்களிடம் டிசைன் துறையைப் பற்றிய ஆர்வம் உள்ள அளவுக்கு வழிகாட்டுதல் இல்லை என்பதுதான். அதற்காகத்தான் மோட்டார் விகடனும் சத்தியசீலனின் AYA டிசைன் அகாடமியும் இணைந்து, ‛ஒரு கார்... ஒரு கனவு’ எனும் பெயரில் கார் டிசைனுக்கு என்று ஆன்லைனில் ஒரு வொர்க்ஷாப்பை நடத்தி வருகிறது. லாக்டெளன் ஆரம்பித்த காலத்தில் இருந்தே நடந்துவரும் இந்த ஆன்லைன் வொர்க்ஷாப்பில் பல மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளார்கள் என்பதைத் தாண்டி, பல ஆட்டோமொபைல் ஆர்வலர்கள், குடும்பத் தலைவர்கள், பெண்கள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டு, கார் டிசைன் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

‛‛இந்த வொர்க்ஷாப்பில் அப்படி என்ன ஸ்பெஷல்? மாணவர்களுக்கு இதில் எந்தளவு பயன்?’’

சத்தியசீலனே சொல்கிறார்: ‛‛ஒரு காரை பேப்பரில் வரைவதில் ஆரம்பித்து, அதை களிமண்ணில் உருவாக்கி, அதற்கென உள்ள இலியாஸ் எனும் சாஃப்ட்வேரில் அதை டெவலப் செய்து, பின்பு கான்செப்ட் காராக மாற்றி, அதை சாலையில் ஓட விடுவது வரை என்னவெல்லாம் சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும் என்பதை விளக்குவதுதான் இந்த வொர்க்ஷாப். அது மட்டுமல்ல; இதற்கென மாணவர்களுக்குத் தனி கோர்ஸும் உண்டு; எந்த கோர்ஸ் படிக்க வேண்டும்; எந்த இன்ஸ்டிட்யூட்டில் படிக்க வேண்டும்; எங்கே படித்தால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுவரை எல்லாவற்றுக்குமான விளக்கமான விடை இந்த வொர்க்ஷாப்பில் கிடைக்கும்!’’ என்கிறார்.

Car Designing

‛‛அப்படி எதுவும் மாணவர்கள் கார் டிசைன் துறையில் ஜொலித்திருக்கிறார்களா?’’

‛‛நிச்சயம். எனது மாணவர் ஒருவர் ஷரோன் ராமலிங்கம் என்று பெயர். அவருக்குக் கார் வரைவதில் அவ்வளவு ஆர்வம். அவருக்கு கார் டிசைனில் உள்ள ஆர்வத்தைக் கண்டுபிடித்து, டிசைனிங் துறையில் நுழைத்தோம். இப்போது அவர் லண்டனில் உள்ள மிகப் பெரிய RCA கல்லூரியில் டிசைனிங் படித்துக்கொண்டே, எம்ஜி நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருக்கிறார். அதுவும் ஸ்டைஃபண்ட் தொகையுடன்! அதைத் தாண்டி ஆடி, கியா, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் டிசைனர் பீட்டர் ஸ்ரேயரின் குழுவில் ஷரோனும் இப்போது உள்ளார் என்பது பெருமையான விஷயம்! நான் நினைத்தாலே ஆடி கார் டிசைன் குழுவைப் பார்வையிடக் கூட முடியாது. ஷரோன், குருவை மிஞ்சிய சிஷ்யனாகிவிட்டார்!’’

‛‛நம் தமிழக மாணவர்களுக்கு கார் டிசைன் துறையில் வாய்ப்பு இருக்கிறதா?’’

‛‛நிச்சயம் இருக்கிறது. ஆனால், மாணவர்களுக்கு வழிகாட்டத்தான் ஆள் இல்லை; அந்தப் பணியைத்தான் இப்போது நான் எடுத்திருக்கிறேன். கார் டிசைன் என்பது ஒரு எமோஷலான விஷயம். அது நம் இந்திய மாணவர்களிடம் அதிகம். பல இந்திய கார் நிறுவனங்களே தங்கள் கார்கள் ஜப்பானியக் கலாசாரத்தையோ, ஜெர்மன் தாக்கத்தையோ பிரதிபலிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்க, முழுக்க முழுக்க இந்தியக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும்படிதான் நான் வாகனங்களை டிசைன் செய்கிறேன். இந்த டிசைன் துறையில், நம் மாணவர்களும் காலடி எடுத்து வைத்தால், பெரிய மாற்றத்தையே கொண்டு வரலாம். அதற்காகத்தான் இந்த வொர்க்ஷாப்!’’ என்கிறார்.

ஆம், இந்த செப்டம்பர் மாதம் 12, 13 மற்றும் 19, 20 தேதிகளில் ஆன்லைனில் ‛ஒரு கார்; ஒரு கனவு’ வொர்க்ஷாப் நடைபெற இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், புரொஃபெஷனல்ஸ் என்று யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி பட்டறை எளிமையான ஆங்கிலத்தில் நடக்கயிருக்கிறது. கார் வரைய மட்டுமில்லை; கார் டிசைனிங் சம்பந்தப்பட்ட கோர்ஸ்களும் இதில் உண்டு என்பதால், இதற்குப் பயிற்சிக் கட்டணம் உண்டு.

4 Days Online Car Design Workshop
பெற்றோர்களே… உங்கள் குழந்தைகளுக்கு உள்ளே இருக்கும் கார் டிசைன் கனவுக்கு வழி விடுங்கள்; அதற்கு நாங்கள் வழிகாட்டுகிறோம்!

4 நாள் கார் டிசைன் ஆன்லைன் வொர்க்‌ஷாப் (ஆங்கிலம்)

நாள்: 12, 13, 19, & 20 செப்டம்பர் 2020

நேரம்: காலை 10.00 முதல் 12.00 வரை

மேலும் விவரங்களுக்கு: http://bit.ly/mvcardesign



source https://www.vikatan.com/automobile/motor/top-designer-sathiyaseelan-about-the-car-designing-workshop-of-motor-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக