டிவி/வெப்சீரிஸின் ஆஸ்கராக கருதப்படும் எம்மி விருதுகள் நடந்து முடிந்துள்ளது. இந்த முறை எம்மியில் என்ன ஸ்பெஷல் என்றால், கொரோனாவின் காரணத்தால் மொத்த நிகழ்வுமே விர்ச்சுவலாகத்தான் நடந்து முடிந்திருக்கிறது. நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் வீட்டிலிருந்தபடியே குடும்பத்தினருடன் விருதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்காக பெரிய திரையுடன் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் விழாவைப் பிரபல அமெரிக்கத் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் ஜாலியாக தொகுத்து வழங்கினார்.
டிஸ்னி+, ஆப்பிள் டிவி+ போன்ற புதிய ஸ்ட்ரீமிங் சேவைகளின் நிகழ்ச்சிகள் முதல்முறையாக எம்மி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் எப்போதும் போல HBO-வின் நிகழ்ச்சிகளே அதிக ஆதிக்கம் செலுத்தின. 'Creative Arts', 'Telecast' என இரு பிரிவுகளும் சேர்த்து மொத்தம் 30 விருதுகளை வென்றிருக்கிறது HBO.
அதிக பரிந்துரைகளைப் பெற்றிருந்த HBO-வின் சூப்பர் ஹீரோ சீரிஸான 'வாட்ச்மென்' அதிக விருதுகளையும் வென்றிருக்கிறது. நகைச்சுவை தொடரான 'ஷிட்ஸ் க்ரீக்'-கும் பல விருதுகளை வென்றுள்ளது. சிறந்த டிராமா சீரிஸாக 'சக்ஷசன்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
when you lose the emmy pic.twitter.com/ECkbGcoHBA
— ramy youssef (@ramy) September 21, 2020
அதிக எம்மி விருதுகளை வென்ற நெட்வொர்க்ஸ்!
Also Read: காலம் குழம்பிய கடவுள்!
HBO- 30
நெட்ஃப்ளிக்ஸ்- 21
பாப் டிவி- 10
டிஸ்னி+- 8
அதிக விருதுகள் வென்ற நிகழ்ச்சிகள்
வாட்ச்மென் (Watchmen)- 11
ஷிட்ஸ் க்ரீக் (Schitt’s Creek)- 9
சக்ஷசன் (Succession)- 7
தி மென்டலோரியன் (The Mandalorian)- 7
source https://cinema.vikatan.com/hollywood/emmy-awards-celebrities-receive-awards-from-home-which-series-excels
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக