Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

கரூர்: `விசாரணைக்காக அழைச்சுட்டுப்போன கணவர் வீடு திரும்பல!' - தாயோடு தீக்குளிக்க முயன்ற பெண்

`எனது கணவரை காவல்துறை விசாரணைக்காக அழைச்சுட்டுப் போனாங்க. ஆனா இன்னைவரைக்கும் திரும்பி வரலை. போலீஸ் அவரை ஏதோ பண்ணிட்டு' என்று தனது தாயோடு சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலைக்கு முயன்ற ஹேமா, மோகனாம்பாள்

கரூர் காந்தி கிராமத்தில் வசித்து வரும் அருண்குமார் (32) என்பவரை விசாரணை என்ற பெயரில், ஈரோடு மாவட்டம், சிவகிரி போலீஸார் நான்கு தினங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றதாக, அவரது மனைவி ஹேமா குற்றம்சாட்டினார்.

Also Read: `தி.மு.கவில் ஸ்டாலின்; அ.தி.மு.கவில் யார் முதல்வர் வேட்பாளர்னு சொல்லமுடியுமா?' - செந்தில் பாலாஜி

`இரண்டு நாள்கள் கடந்தும் அவர் வீடு திரும்பவில்லை. சிவகிரி போலீஸாரிடம் கேட்டால், விசாரணை முடித்து அனுப்பி விட்டோம் என கூறுகிறார்கள்' என்று கண்ணீரோடு தெரிவித்தார்.

தற்கொலைக்கு முயன்ற ஹேமா, மோகனாம்பாள்

இந்தநிலையில், தனது தாய் மோகனாம்பாளோடு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஹேமா, போலீஸார் விசாரணைக்கு சென்ற தனது கணவரை மீட்டுத்தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அங்கு காவலுக்கு இருந்த போலீஸார், இருவரது தற்கொலை முயற்சியையும் தடுத்தனர்.

அதன்பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேசிய ஹேமா,

``என்னோட தம்பி பேரு முரளி. இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறான். இந்தநிலையில், சிவகிரியை சேர்ந்த பொன்காவியா என்ற பெண்ணை காதலித்தான். அந்தப் பெண், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இருவரும் ஈரோட்டில் ஒன்றாகப் பள்ளியில் படிக்கும்போதே, ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த காதல் செல்போன் மூலம் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளது.

ஹேமா

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி அன்று முரளியும், பொன்காவியா இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் சென்று திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு சிவகிரியில் இருந்து வந்த போலீஸார், கரூர் காந்திகிராமத்தில் வீட்டிலிருந்த என்னோட கணவர் அருண்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மூன்று நாள்களாகியும் என் கணவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், சிவகிரி போலீஸாரிடம் விசாரித்தபோது, 'விசாரணையை முடித்து அருண்குமாரை அனுப்பி விட்டோம்' கூறினர். ஆனால், 'போலீஸ் விசாரணை' என்ற பெயரில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட எனது கணவர் இரண்டு நாள்கள் கடந்தும் வீடு திரும்பவில்லை. எனவே, எனது கணவரை மீட்டுத் தரக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தீக்குளிக்க முயன்றோம். ஆனால், போலீஸார் தடுத்துவிட்டனர். பெண் வீட்டார் வசதிபடைத்தவர்கள்.

தற்கொலைக்கு முயன்ற ஹேமா, மோகனாம்பாள்

ஆள் பலமும், அதிகாரப்பலமும் உடையவர்கள். போலீஸார் என் கணவரை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. அந்தப் பெண்ணும், என் தம்பியும் எங்கு இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. என் தம்பி உயிருக்கும் அவர்களால் ஆபத்து. கரூர் மாவட்ட போலீஸ்தான் என் கணவரையும், தம்பியையும் கண்டுபிடித்து, மீட்டுத் தரணும்" என்று கண்ணீரோடு கோரிக்கை வைத்தார்.

ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றதாக தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார், மோகனாம்பாள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/karur-woman-attempted-suicide-in-collector-office-premises

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக