Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

திண்டுக்கல்: திருடிக் கொண்டிருக்கும்போதே வந்த போலீஸார்! - சிக்கிய கடப்பாறை திருடன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல்நிலையம் அருகே, வத்தலக்குண்டு - மதுரை ரோட்டில் உள்ளது சூப்பர் மெடிக்கல் ஷாப். அப்பகுதியில் நள்ளிரவில் ரோந்து சென்ற போலீஸார், மருந்துகடை திறந்திருப்பதை பார்த்துள்ளனர். உள்ளே லைட் எதுவும் எரியாமல் கடை திறந்திருந்ததால் சந்தேகமடைந்த அவர்கள், கடை அருகே சென்றுள்ளனர். அப்போது, கடைக்குள் இருந்து ஒருவன் வெளியே ஓட முயற்சித்துள்ளான். அவனை பிடிக்க போலீஸார் முயன்றுள்ளனர். அப்போது கடை வாசலில் சமூக இடைவெளிக்காக வைக்கப்பட்டிருந்த கட்டையில் மோதி கீழே விழுந்த அவனை பிடித்த போலீஸார், காவல்நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். அவன் சொன்ன தகவல்களைக் கேட்டு அதிர்ந்துபோயினர் காவல்துறையினர்.

திருடன்

Also Read: திண்டுக்கல்: கழுத்தில் கத்தி... தற்கொலைக்கு முயன்றவரை தடுக்கச் சென்ற பெண் காவலர் காயம்!

அவர் பெயர் லெட்சுமணன் (வயது 43), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த இவர், சில மாதங்களுக்கு முன்னர், புதுக்கோட்டையில் திருட்டு வழக்கில் கைதாகி, 4 நாட்களுக்கு முன்னர் தான் புதுக்கோட்டை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். நேற்று(17.09.2020) அறந்தாங்கியில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் நிலக்கோட்டை வந்த லெட்சுமணன், மாலை 5 மணிக்கு, தலைவலிக்காக, சூப்பர் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கியுள்ளான். அப்போது, கடை உரிமையாளர், பணத்தை எண்ணிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனைப் பார்த்த லெட்சுமணன், கடையில் திருட திட்டமிட்டு நள்ளிரவில் கடை ஷட்டரை உடைத்து கடையில் இருந்த ரூ 37 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்ப முயன்ற போது போலீஸாரிடம் மாட்டியுள்ளான். லெட்சுமணன் பற்றி மேலும் தகவல்கள் சேகரித்த நிலக்கோட்டை போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

லெட்சுமணன்

28 வயதில் முதல் திருட்டை ஆரம்பித்த லெட்சுமணன் மீது தமிழகம் முழுக்க 53 திருட்டு வழக்குகள் உள்ளன. கைதாகி ஜாமின் பெற்று தலைமறைவாக இருந்து, அடுத்த திருட்டுக்கு பிளான் போடுவது லெட்சுமணனின் வழக்கம். கடப்பாறையை வைத்து பூட்டை லாவகமாக உடைத்து திருடும் திறமை கொண்டவன் லெட்சுமணன். அவனிடம் இருந்து கடப்பாறை, கட்டிங்பிளேடு, ஸ்குரூடிரைவர் போன்ற பொருள்கள் கைப்பற்றப்பட்டன. லெட்சுமணனுக்கு அறந்தாக்கியில் 10ம் வகுப்பு படிக்கும் மகள் மற்றும் மனைவி உள்ளனர். திருட்டை மட்டுமே தொழிலாக கொண்ட கடப்பாறை திருடன் லெட்சுமணன், சிறையில் இருந்து வெளியே வந்த 5வது நாள் மீண்டும் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: `ரூ.260 வரை 600 வரை.. வகுப்புவாரியாக வசூலித்த அரசுப் பள்ளி!’ - திண்டுக்கல் சர்ச்சை



source https://www.vikatan.com/news/crime/police-came-while-stealing-thief-got-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக