Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி... 8 உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்! #NowAtVikatan

8 உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்!

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகியவற்றுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வேளாண் மசோதாக்களை மாநிலங்களவையில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவுச் செய்தது. அப்போது சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை விதிகள் புத்தகத்தை கிழித்து எறிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவை

இந்நிலையில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக தெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலையும் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால் காலை 10 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/21-09-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக