Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

மகாராஷ்டிரா: அதிகாலையில் இடிந்து விழுந்த அடுக்குமாடிக் கட்டடம் - 10 பேர் பலி... தொடரும் மீட்புப் பணி

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியிலுள்ளது படேல் காம்பவுண்டு. இன்று அதிகாலை சுமார் 3:30 மணி அளவில் குடியிருப்புவாசிகள் தூங்கிக்கொண்டிருக்கையில், பெரும் சத்ததுடன் படேல் காம்பவுண்டிலுள்ள மூன்ரு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் கடுமையான இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

மீட்புப் பணி

இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் போலீஸார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் பலர் சிக்கிக்கொண்டதால், மீட்கும் பணி மிக மிக கவனமாக மேற்கொள்ளப்பட்டது. காலையில் எட்டு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நடந்துவந்த மீட்புப் பணிகளில் மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் இந்தக் கட்டட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்திருக்கிறது. சுமார் 20 பேர் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Also Read: சீர்காழி : டூவிலரில் ஆடு திருடி வந்தபோது விபத்து! - ஒருவர் பலி; இருவர் படுகாயம்

இந்தக் கோர விபத்து குறித்து ட்விட்டரில் தனது வருத்தங்களை பதிவுசெய்திருக்கிறார் பிரதமர் மோடி. அவர் தனது பதிவில், `மகாராஷ்டிராவின் பிவாண்டியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த விபத்தால் இன்னல்களைச் சந்திக்கும் குடும்பங்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் மீள பிரார்த்தனை செய்கிறேன். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’’ என்றார். இந்த விபத்து தொடர்பாக விசாரணையும் நடைபெற்றுவருகிறது.



source https://www.vikatan.com/news/accident/10-people-have-lost-their-lives-in-bhiwandi-building-collapse-incident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக