அமைச்சர் சேகர் பாபு அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ள பாரி முனை பேருந்து நிறுத்தம் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து அச்சுறுத்தும் விதமாகவே காட்சி அளிக்கும். பேருந்துகள் நிற்பதால் மட்டுமே பேருந்து நிறுத்தம் என்று அறியப்படுகிறது. சரியான சாலையோ, நடைமேடையோ, மின்விளக்குகளோ எதுவுமின்றி அதைப் பேருந்து நிலையமாகவே கருத முடியாத நிலையே நீடித்து வந்தது.
Also Read: பாரி முனை: இருளில் தவிக்கும் பயணிகள்; சென்னையில் இப்படியும் ஒரு பேருந்து நிலையம்-கண்டுகொள்ளுமா அரசு?
அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் , சீர்குலைந்து கிடந்தது அந்த பேருந்து நிலையம். பயணிகளின் சிரமங்களையும் , அவர்களின் தேவைகளையும் குறித்து விகடன் இணையதளத்தில் விரிவாக பதிவிட்டிருந்தோம்.
இதனைத் தொடர்ந்து , அந்த பேருந்து நிலையத்தை முற்றுலுமாக அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்திருக்கிறார். உடனடியாக அதை சீரமைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
தற்போது நிறுத்தத்தின் நான்கு பக்கங்களிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குப்பை கிடங்காய் கிடந்த மூலைகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு இன்று பயணித்த சிலரிடம் பேசியதில், பயமின்றி இனி நிறுத்தத்தின் எல்லை வரை செல்லலாம் என்றும், இந்த முயற்சி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்னும் பாதுகாப்பாக அமைந்துள்ளது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர். விரைந்து செயல்பட்ட அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியும் , பாராட்டுகளும்!
source https://www.vikatan.com/news/tamilnadu/after-vikatan-news-lights-were-fitted-in-broadway-bus-station
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக