இதயத்தில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்துகொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன? ஆஞ்சியோகிராம் செய்தபின் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாமா...?
- ஜெயராம் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
``ஆஞ்சியோகிராம் என்ற சிகிச்சை இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியச் செய்யப்படுவது. இந்தச் சிகிச்சை முடிந்ததும் சில நாள்களுக்கு நீங்கள் வழக்கமாகச் செய்கிற விஷயங்களைச் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுவீர்கள். அதுவும் அதிகபட்சம் ஒரு வாரத்துக்குதான் இருக்கும். ஒருவேளை ஆஞ்சியோகிராம் ரிப்போர்ட்டில் இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் அடைப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டாலோ, வேறு பெரிய பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டாலோ அது சரிசெய்யப்படுகிறவரை நீங்கள் உங்கள் வழக்கமான வேலைகளைச் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுவீர்கள்.
உங்கள் பிரச்னையின் தீவிரத்துக்கேற்ப உங்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது ஸ்டென்ட்டிங் அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கலாம்.
Also Read: Doctor Vikatan: தினமும் வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?
அது முடிந்து, மருத்துவர் அறிவுறுத்தும்வரை வழக்கமான வேலைகளைச் செய்யாமலிருப்பது நல்லது. மற்றபடி ஆஞ்சியோகிராமில் பிரச்னைகள் இல்லாதபட்சத்தில் ஸ்கிப்பிங் உள்ளிட்ட பயிற்சிகளை நீங்கள் செய்யலாம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/can-people-who-underwent-angiogram-do-exercise
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக