Ad

சனி, 25 டிசம்பர், 2021

Doctor Vikatan: மாத்திரைகளில் குறையாத ரத்தச் சர்க்கரை; இன்சுலினுக்கு மாறுவதுதான் தீர்வா?

எனக்கு 15 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. மூன்றுமாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவான HbA1c, 8 அல்லது அதற்கு மேல்தான் இருக்கிறது. மாத்திரைகள் சாப்பிட்டும் குறைக்க முடியவில்லை. HbA1c அளவைக் கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்ய வேண்டும்? தற்காலிகமாக இன்சுலினுக்கு மாறிவிட்டு, HbA1c குறைந்ததும் மீண்டும் மாத்திரைகளைத் தொடர்வது சரியா?

- மகாலிங்கம் (விகடன் இணையத்திலிருந்து)

வி.மோகன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் வி.மோகன்.

``மாத்திரைகளின் மூலம் குறையாத HbA1c அளவை நீங்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். முதல் வேலையாக நீங்கள் சாதம், மாவுச்சத்துள்ள பிரெட், சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்றவற்றின் அளவைக் குறைத்து, காய்கறிகளின் அளவை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் HbA1c அளவைக் குறைக்க முடியும். புரதச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டை, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.

Also Read: Doctor Vikatan: ஒரே நேரத்தில் ஒருவரை இரண்டு வைரஸ் தாக்குமா?

சைவ உணவுக்காரர்கள் என்றால் கொண்டைக்கடலை, பாசிப்பயறு, சுண்டல், காளான், ராஜ்மா உள்ளிட்டவற்றை சேர்த்துக்கொண்டால் நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகம் கிடைக்கும்.

ரத்தச் சர்க்கரையின் அளவும் குறையும். தினமும் அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை வேகமான நடைப்பயிற்சி செய்வதன் மூலம் எடையும் குறையும். HbA1c அளவையும் 7-க்கு கொண்டுவர முடியும்.

Diabetes (Representational Image)

Also Read: Doctor Vikatan: எடையைக் குறைக்க எது சிறந்த டயட்?

தற்காலிகமாக மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் ரத்தச் சர்க்கரையின் அளவு குறையலாம். அதன்பிறகு இன்சுலினை நிறுத்திவிட்டு, மீண்டும் மாத்திரைகளுக்கு மாறலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/tablets-did-not-reduce-my-blood-sugar-level-should-i-opt-for-insulin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக