நான் சிங்கப்பூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். கொரோனா காலத்தில் அங்கேயே ஃபைஸர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டேன். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் எனக்கு வேலைபோய்விட்டதால், நான் இந்தியா திரும்பிவிட்டேன். இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துவருவதைப் பார்க்கிறேன். இங்கே மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் போடப்படவிருக்கிற செய்தியைக் கேள்விப்பட்டேன். முதல் இரண்டு டோஸ் ஃபைஸர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நான், மூன்றாவது டோஸாக வேறொன்றை போட்டுக்கொள்ளலாமா?
- மைக்கேல் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
``பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பான பல சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கின்றன. இரண்டு டோஸ் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்கள், மூன்றாவதாக கோவிஷீல்டு எடுத்துக்கொள்ளலாமா, கோவிஷீல்டு எடுத்துக்கொண்டவர்கள் கோவாக்சின் எடுத்துக்கொள்ளலாமா என்பது மிக முக்கியமான சந்தேகமாகத் தொடர்கிறது.
வெளிநாடுகளில் எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், இந்தியாவில் வேறு தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது. இப்படி தடுப்பூசிகளை மாற்றிப்போடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.
Also Read: Doctor Vikatan: ஒரே நேரத்தில் ஒருவரை இரண்டு வைரஸ் தாக்குமா?
எனவே சிங்கப்பூரில் ஃபைஸர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்டுள்ள நீங்கள், இந்தியாவில் மூன்றாவது தவணையாக கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் என எதையும் எடுத்துக்கொள்ளலாம். பிரச்னையில்லை."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/i-took-two-doses-of-pfizer-vaccine-in-singapore-which-booster-should-i-prefer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக