அதிகமாகத் திட்டமிடுங்கள்
நிறைய திட்டமிட வேண்டும். இதற்கு அதிக காலம் ஆனாலும் பரவாயில்லை. பின்னர் செயல்முறையில் வேகத்தைக் கூட்டிக் கொள்ள முடியும். திட்டமிடலில் ஒரு பகுதியாக சந்தைக் கணிப்பு (மார்க்கெட் சர்வே) இருந்தாக வேண்டும். குறைந்தபட்ச தயாரிப்பு, திடீர் தேவைகள் எப்போது உருவாகும் போன்றவற்றை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அருகிலிருப்பது சிறப்பு
தயாரிப்புக்கான அடிப்படைப் பொருள்கள் கிடைக்கும் இடம் அல்லது விற்பனை கூடம் ஆகிய இரண்டில் ஒன்றாவது அருகில் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் போக்குவரத்துச் செலவு குறையும். தயாரிப்புத் தொழில் என்றால் உதிரி பாகங்கள் கிடைக்கும் இடம், ரிப்பேர் செய்யும் இடம் ஆகியவை அருகில் இருப்பது நல்லது.
தவிர்ப்பது நல்லது
சில இடங்களில் அடிக்கடி போராட்டங்கள் நடைபெறும். கூட்டங்களுக்கான மைதானங்களும் அங்கு இருக்கலாம். அப்படியான பகுதிகளில் தொழில் தொடங்குவதைத் தவிர்த்துவிடுவது புத்திசாலித்தனம்.
வாக்குகள் மீறப்படுவதற்கல்ல
கொடுக்கப்படும் எந்த வாக்குறுதியையும் காப்பாற்ற வேண்டும். நம்பகத் தன்மையை இழந்துவிட்டால் வெற்றி பெற முடியாது.
எல்லாவற்றிற்கும் ப்ளான் ‘பி’
மாற்றுச் சூழல்களுக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் வழக்கத்தைவிட ஒரு மாதம் தாமதமாகப் பணம் கொடுத்தால்? உங்களுக்கு ஒரு மாதம் உடல்நலம் இல்லாது போனால்? இப்படிக் கேள்விகளை எழுப்பிக் கொண்டு அவற்றுக்கு முன்னதாகவே தயார் செய்து கொள்வது நல்லது.
உரிய அவகாசத்தை அளியுங்கள்
‘அக்ளி டக்ளிங்’ என்ற கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாத்துக் குஞ்சு ஒன்றுக்கு பெருத்த சோகம். அது பார்ப்பதற்கு அழகில்லாமல் இருப்பதாக அதன் நண்பர்கள் அதனுடன் விளையாட மறுத்தனர். தினமும் தண்ணீரில் தன் தோற்றத்தைப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மை கொண்டது.
ஒருநாள் தண்ணீரில் தன் பிம்பத்தைப் பார்த்ததும் தான் மிக அழகிய தோற்றம் கொண்ட அன்னமாக மாறிவிட்டதை அது உணர்ந்தது.
'அக்ளி டக்ளிங்' உணர்த்துவது இதைத்தான். எது குறித்தும் உடனடியாக ஒரு முடிவுக்கு வராதீர்கள். எந்தப் பலனும் உடனடியாக வந்து சேரும் என்று நினைக்க வேண்டாம். பொறுத்திருங்கள். நீங்கள் நினைக்கும் சிறப்பு வந்து சேரும்.
source https://www.vikatan.com/business/miscellaneous/keep-these-six-things-in-mind-before-starting-a-business
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக