இந்த வாரம் கம்பெனி பயோடேட்டாவில் நாம் பார்க்கப்போகும் நிறுவனம் 1970-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, ரசாயனப் பொருள்கள் உற்பத்தியில் இன்றைக்கு மிகவும் பிரசித்திபெற்ற நிறுவனமாகத் திகழும் தீபக் நைட்ரைட் லிமிடெட்.
நிறுவனத்தின் வரலாறு...
இந்த நிறுவனம் 1970-ம் ஆண்டில் சிமன்லால் கே மேத்தா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஒரு ரசாயனப்பொருள் வர்த்தகராக மிகவும் பிரபலமாக இருந்தார் இவர். இதனாலேயே இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, செயல்பட ஆரம்பிக்கும் முன்பே வெளியிடப்பட்ட இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வானது அந்தக் காலத்திலேயே 20 மடங்குக்கு அதிகமான அளவில் ஓவர் சப்ஸ்க்ரைப் ஆனது. இந்த நிறுவனம் ஆரம் பிக்கப்பட்ட இரண்டாவது நிதி ஆண்டிலேயே 1972-73-ம் ஆண்டிலேயே லாபகரமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டது.
நிறுவனத்தின் வளர்ச்சி...
இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளைத் தாண்டி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிற இந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள ரசாயனப் பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முன்ணனி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. உலக அளவிலான வாடிக்கை யாளர்களைக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், உள்நாட்டு ரசாயான உற்பத்தி நிறுவனம் என்ற நிலையில் இருந்து உலக அளவில் முன்னேறும் குழுமம் என்ற நிலையை எட்டியுள்ளது.
சைலிடைன்ஸ், க்யுமிடைன்ஸ் மற்றும் ஆக்சைம்ஸ் போன்ற ரசாயனப் பொருள்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். உலக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவன ரீதியிலான (இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான ரசாயனப் பொருள்களை உபயோகிக்கும் ஏனைய பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள்) வாடிக்கையாளர்களைக் கொண்டு இன்றைக்கு வெற்றிகரமாகச் செயல் பட்டுவருகிறது இந்த நிறுவனம்.
1972-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள வதேதரா என்னும் இடத்தில் சோடியம் நைட்ரைட் மற்றும் சோடியம் நைட்ரேட் உற்பத்தி வசதியை நிறுவியது. 1984-ம் ஆண்டில் மஃபத்லால் குழுமத்திடம் இருந்து சஹாயத்ரி டைஸ் & கெமிக்கல்ஸ் எனும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. 1992-ம் ஆண்டில் நந்தசேரி எனும் இடத்தில் நைட்ரோ அரோமேட்டிக் வேதிப்பொருள்கள் உற்பத்தி வசதியை நிறுவியது தீபக் நைட்ரைட் நிறுவனம்.
1995-ம் ஆண்டில் தலோஜா எனும் இடத்தில் ஹைட்ரோஜினேஷன் மையம் ஒன்றை நிறுவிய இந்த நிறுவனம், 2003-ம் ஆண்டில் ஆரியன் பெஸ்டிசைட்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. 2007-ம் ஆண்டில் தெலங்கானாவில் செயல்பட்டு வந்த வசந்த் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் டைஅமினோ ஸ்டில்பீன் டைசல்போனிக் அமில (Diamino Stilbene Disulfonic Acid) உற்பத்தி வசதியைக் கையகப்படுத்தியது.
2010-ம் ஆண்டில் அடிட்டிவ் எனும் வகை வேதிப்பொருள்கள் உற்பத்தியில் கால்பதித்த இந்த நிறுவனம், 2013-ம் ஆண்டில் நந்தசேரியில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சோடியம் நைட்ரேட் மற்றும் நைட்ரைட் உற்பத்தி வசதிக்கான விரிவாக்கத்தைச் செய்தது. 2014-ம் ஆண்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன்கூடிய ஆப்டிக்கல் ப்ரைட்டனிங் ஏஜென்ட் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்வதற் கான வசதி ஒன்றை நிறுவியது இந்த நிறுவனம்.
2015-ம் ஆண்டில் ஃபீனால் மற்றும் அசிட்டோன் உற்பத்தி செய்வதற்காக தீபக் பீனோலிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தன்னுடைய துணை நிறுவனமாக நிறுவியது. 2018-ம் ஆண்டில் இந்த உற்பத்தி மையத்தில் வர்த்தகத்துக்கான ஃபீனால் மற்றும் அசிட்டோன் வேதிப் பொருள்கள் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 2019-ம் ஆண்டில் தீபக் பீனோலிக்ஸ் நிறுவனம் ரூ.2,000 கோடி என்ற விற்று வரவு இலக்கைக் கடந்தது.
இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் ஆறு உற்பத்தி வசதிகளுடன் (நந்தசேரி, ரோஹா, தலோஜா, ஹைதராபாத் மற்றும் தஹிஜ் என்ற ஐந்து இடங்களில்) இயங்கிவரும் தீபக் நைட்ரைட் நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை உலக அளவில் ஆறு கண்டங்களில் உள்ள 30 நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர் களுக்கு விற்பனை செய்துவருகிறது.
56-க்கும் மேற்பட்ட உபயோகம் கொண்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவன ரீதியிலான வாடிக்கையாளர்களுக்கு விற்று வருகிறது இந்த நிறுவனம். யூனிலீவர், இந்தியன் ஆயில், ரிலையன்ஸ், ராலீஸ், பாயர், பி.ஏ.எஸ்.எஃப், லாஓரியல், லூப்ரிசால் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பார்மா, அக்ரோகெமிக்கல், ரெசின்ஸ், பெர்சனல் கேர், பெட்ரோகெமிக்கல், அடிசிவ்ஸ், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ், பேப்பர், கோட்டிங், ப்யூயல் அடிட்டிவ்ஸ், டிட்டெர்ஜென்ட்ஸ் போன்றவற்றின் உற்பத்தியில் உபயோகிக்கப்படுகிறது.
குஜராத்தில் உள்ள நந்தசேரி எனும் இடத்தில் இந்த நிறுவனத் தின் ஆராய்ச்சி மையம் நிறுவப் பட்டுள்ளது. எழுபது அறிவியல் ஆராய்ச்சியாளர் களைக் கொண்டு செயல்படும் இந்த ஆராய்ச்சி வசதியானது மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு ஆராய்ச்சி வசதி ஆகும்.
தொழில் பிரிவுகள்...
தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், இந்த நிறுவனம் பேசிக் கெமிக்கல்கள் (ஆர்கானிக், இன்-ஆர்கானிக் மற்றும் அடிட்டிவ்ஸ்), ஃபைன் மற்றும் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள், பர்ஃபாமன்ஸ் புராடக்ட்ஸ் என்ற மூன்று பெரும்பிரிவுகளில் இயங்கி வருகிறது.
பேசிக் கெமிக்கல்கள் பிரிவில் சோடியம் நைட்ரைட், சோடியம் நைட்ரேட், நைட்ரோ டொலு யிடீன்ஸ், ஃப்யூயல் அடிட்டிவ்ஸ், நைட்ரோசில் சல்ப்யூரிக் ஆசிட் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்தப் பிரிவுக்கு பாரத் பெட்ரோலியம், சுதர்சன் கெமிக்கல், குட் இயர் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங் கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. பைன் மற்றும் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பிரிவில் சைலிடீன்ஸ், ஆக்சைம்ஸ், க்யூமிடீன்ஸ் மற்றும் ஸ்பெஷா லிட்டி அக்ரோ கெமிக்கல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
இந்தப் பிரிவில் க்ளேரியன்ட், ஹென்கல், சின்ஜென்ட்டா, மிசுயி அண்ட் கோ லிட் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களாக இருக்கின்றன. பர்ஃபாமன்ஸ் புராடக்ட்ஸ் பிரிவில், ஆப்டிக்கல் ப்ரைட்டனிங் ஏஜென்ட்கள் மற்றும் ப்ளா வோனிக் ஆசிட்டை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். இந்தப் பிரிவுக்கு ஜே.கே பேப்பர், டி.என்.பி.எல், நிர்மா, இன்டர்நேஷனல் பேப்பர், ஹிமாத்சிங்கா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கை யளராக இருக்கின்றன.
விற்றுவரவு ரீதியிலாகப் பார்த்தால், இந்த நிறுவனத்தின் விற்று வரவில் அடிப்படை வேதிப் பொருள்களின் பங்களிப்பு 46 சத விகிதமாகவும், ஃபைன் மற்றும் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்களின் பங்களிப்பு 38 சதவிகிதமாகவும், ஃபர்பாமன்ஸ் கெமிக்கல்களின் பங்களிப்பு 16 சதவிகிதமாகவும் கடந்த நிதி ஆண்டில் இருந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, 1,897 நேரடிப் பணியாளர்களையும் 2820 ஒப்பந்த ரீதியான பணியாளர்களையும் கொண்டு இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.
ரிஸ்க்குகள் என்னென்ன?
ரசாயனப் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங் களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலப்பொருள்கள் விலை உயர்வு, தொழில்நுட்பத்தில் வருகிற வெகுவான முன்னேற்றங்கள், ஆராய்ச்சி மையங்களில் போட்டி நிறுவனங்கள் பெறக்கூடிய கணிசமான வெற்றி, வாடிக்கையாளர்களின் தேவைகள் மாறுதல், சுற்றுச்சூழல் சார்ந்த அரசாங்கத்தின் கொள்கைகள், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளேயாகும். மேலும், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் செயல்பட்டுவரும் துறைகள் பலவும் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்து வளரும் குணாதிசயம் கொண்டவையாக இருப்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவிலான வளர்ச்சியை அடையாதுபோனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிப்பதற்கான வாய்ப்புள்ளது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!
source https://www.vikatan.com/business/share-market/company-reviews-for-deepak-nitrite-limited
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக