Ad

சனி, 4 டிசம்பர், 2021

கமல்ஹாசன்: மருத்துவமனையில் புத்தக வாசிப்பு, விக்ரம் டிஸ்கஷன், டிஸ்சார்ஜ் ஆனதும் பிக் பாஸ் விசிட்!

12 தினங்களுக்கு முன்பு ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன். இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். கமல் விர்சுவலாகத் தோன்றி ரசிகர்களிடமும், போட்டியாளர்களிடமும் பேசினார். முதல் நான்கு நாட்களுக்கு மட்டுமே அவருக்கு லேசான காய்ச்சலும் இருமலும் இருந்திருக்கிறது.

கமல்ஹாசன்

அப்போது கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நிறைய படித்திருக்கிறார் கமல். பேச நேரமில்லாத நண்பர்களுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். விக்ரம் படம் பற்றிய சில கருத்துக்களையும் லோகேஷிடம் பரிமாறிக்கொண்டுள்ளார். பொள்ளாச்சியில் போட்ட விக்ரம் படத்தின் செட் சென்னைக்கு மாற்றப்பட்டு அதன் வேலைகள் நாலைந்து நாட்களில் முடிவடைகின்றன. இன்று காலையில் ராமச்சந்திராவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவர் உடனே வீட்டிற்குத் திரும்பினார். ஓய்வுகூட எடுக்காமல் பிக்பாஸ் படப்பிடிப்புக்கு இப்போது புறப்பட்டுவிட்டார். செட்டில் இப்போது வந்து இறங்கிய கமலைப் பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கிறார்கள்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/article-about-kamal-hasans-discharge-from-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக