Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

கரூர்: பள்ளி வகுப்பில் ஆபாச வார்த்தைகள்; ஆசிரியர் சஸ்பெண்ட்! -தொடரும் பாலியல் வன்முறை

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் ரீதியாக வண்ணங்களை குறிப்பிட்ட, அந்த பள்ளியின் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

தான்தோன்றிமலை

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள பாகநத்தத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பன்னீர்செல்வம் (48). இவர், வகுப்பில் அறிவியல் பாடங்கள் எடுக்கும்போது பாலியல் ரீதியான வண்ணங்களை பயன்படுத்தி குறிப்பிட்டு பேசியதாகவும், ஆபாச வார்த்தைகளை அவ்வபோது பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. தொடர்ச்சியாக இங்குள்ள மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலர் பள்ளியிலும், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அதோடு, தனது விசாரணை அறிக்கையை, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தாக்கல் செய்தார். அதனடிப்படையில், உதவி ஆசிரியர் பன்னீர்செல்வத்தை, மாவட்டக் கல்வி அலுவலர் விஜேயந்திரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இப்படி, கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்குக்கு மேற்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பது, பொதுமக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

Also Read: `பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும்’ -கரூர் பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம்

இதுகுறித்து பேசிய, சமூக ஆர்வலர்கள் சிலர், "கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, அங்குள்ள ஒருவர் பாலியல். வன்கொடுமை செய்தார். அந்த அதிர்ச்சி விலகுவதற்குள், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர்ரும், மருத்துவமருமான ரஜினிகாந்த் என்பவர், தனது மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். இந்த நிலையில், கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 - ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், 'பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் கடைசி பொண்ணு நானாக இருக்கனும்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கில் காவல்துறை விசாரணையை மட்டும் நடத்திக்கொண்டிருக்க, இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்த சரவணன் என்பவர், 'மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு நான் காரணம் இல்லை' என்று கடிதம் எழுதிவிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

கரூர்

இந்த நிலையில்தான், பாகநத்தம் நடுநிலைப் பள்ளியில் 8 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் பன்னீர்செல்வம் பாடங்களை ஆபாசமாக நடத்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த மாவட்டத்தில் இப்படி பள்ளி மாணவிகள் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை இனியாவது விழித்துக்கொண்டு, ஸ்ட்ராங்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/karur-school-teacher-suspend-after-sexual-abuse-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக