Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

சூரிய கிரகணம் 2021: எங்கு, எப்போது நிகழ்கிறது? காணமுடியுமா?

சூரியனும், சந்திரனும், பூமியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது, முழு சூர்ய கிரகணம் நிகழும். இது கடந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி நிகழ்ந்தது, இந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி இன்று நிகழ்கிறது, அடுத்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி நிகழும் என்றும் கணித்துள்ளனர். சில சமயங்களில், நிலவால் மறைக்கப்பட்டு, சூரியன் ஒரு நெருப்பு வளையம் போன்ற காட்சி அளிக்கும், இதனை வளைய மற்றும் கங்கண சூரிய கிரகணம் என்றும் கூறுவார்கள். இந்த வருடம் நிகழப் போகும் சூரிய கிரகனம், காலை 10.59 முதல் 3.07 வரை நிகழும் என்று கூறியுள்ளனர். இந்திய நேரப்படி இந்த சூரிய கிரகணம் மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.

சூரிய கிரகணம்

இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது, இதனை தென்ஆப்பிரிக்கா, சிலி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து. போன்ற நாடுகளில் மட்டுமே காண முடியும். பூமி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதை முழு சூர்ய கிரகணம் என்று அழைப்பார்கள், இது அண்டார்டிக்காவில் மட்டுமே தெரியும் என்று பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் அறிவியல் அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த சூரிய கிரகணம் நிகழும் போது கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லவேண்டாம் என்று ஜோதிடர்கள் கூறுவர்.



source https://www.vikatan.com/science/astronomy/article-about-solar-eclipse-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக