Ad

சனி, 4 டிசம்பர், 2021

சிங்கப்பூர் டு திருச்சி வந்தவருக்கு கொரோனா; ஒமைக்ரான் வார்டில் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பு!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் ஒமைக்ரான் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகளும் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

திருச்சி விமான நிலையம்

Also Read: Doctor Vikatan: ஒமைக்ரான் பாதித்தவர்களைத் தனியே வைத்து சிகிச்சை அளிக்கச் சொல்வது ஏன்?

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் தொற்று, தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கர்நாடகாவைச் சேர்ந்த இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது எனவும், இது டெல்டா வகையைவிட ஐந்து மடங்கு வேகமாகப் பரவக்கூடியது எனவும் மத்திய அரசு எச்சரித்திருக்கிறது.

இந்த நிலையில், ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது என்கிற செய்தி மீண்டும் உலக மக்கள் மத்தியில் பீதியை அதிகப்படுத்தியிருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டிருக்கின்றன. அந்த வகையில், மீண்டும் இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கிறது.

சிறப்பு வார்ட்

Also Read: ஓமிக்ரான்: ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு குணமானவர்களையும் பாதிக்குமா புது வேரியன்ட்? - FAQ

இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை நள்ளிரவில் வந்த விமானத்தில் 136 பயணிகள் இருந்தனர். அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதில், தஞ்சையைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் அச்சம் காரணமாக அவர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்தோடு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து திருச்சி டீன் வனிதா பத்திரிகையாளர் சந்திப்பில், ``திருச்சி அரசு மருத்துவமனையில் மதுபோதை மீட்பு மையம் தற்போது ஒமைக்ரான் சிகிச்சை சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு உள்ளது. சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் 136 பயணிகள் வந்தனர்.

திருச்சி டீன் வனிதா

அவர்களைப் பரிசோதனை செய்ததில் தஞ்சையைச் சேர்ந்த ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 56 வயதாகும் அவர் நன்றாக இருக்கிறார். இப்போதைக்கு பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது.

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளாரா எனக் கண்டறிய முதற்கட்ட பரிசோதனை (ஸ்கிரீனிங் முறை) நடந்து வருகிறது. அவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும். மேலும் அவர்களுடன் வந்த 140 பேரை சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/man-returned-from-singapore-to-trichy-tested-covid-positive-isolated-in-omicron-ward

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக