Ad

சனி, 4 டிசம்பர், 2021

சென்னை: `சாமி கொடுத்த குழந்தை' - போலீஸ்காரர், அவரின் சகோதரனிடம் ரூ.32 லட்சத்தை ஏமாற்றிய பெண்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, மூலக்கரை சேத்தூர் போஸ்ட் பகுதியைச் சேர்ற்தசர் பாரதிராஜா (25). இவர், கடந்த 2.12.2021-ம் தேதி ஆவடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 27.1.2021-ம் தேதி என்னுடைய ஃபேஸ்புக் அக்கவுண்டுக்கு சந்தியா என்ற ஐடியிலிருந்து ஃப்ரெண்ட்ஸ் ரெக்யூஸ்ட் வந்தது. நானும் அதை அக்செப்ட் செய்தேன். அப்போது அந்த பெண் தன்னுடைய பெயர் கீர்த்தி ரெட்டி என்றும் தான் ஒரு மருத்துவர் என்றும் என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார். சிறிது நாள்களில் அந்தப் பெண், என்னிடம் நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறி என் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசினார். மேலும் அந்தப் பெண் என்னிடம் என் முகத்தை பார்க்க கூடாது என்னை நேரில் பார்க்க வரக்கூடாது என்று கூறினார்.

பணம் அனுப்பியதற்கான மெசேஜ்

அந்தப் பெண்ணிற்கு கடவுள் கூறியதாக கூறி தனக்கு தானே தாலி கட்டிக்கொண்டதாக என்னிடம் கூறினார். நான் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வற்புறுத்தி கேட்டதால் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை இதுதான் நான் என்று கூறி அனுப்பினார். நானும் அதை நம்பினேன். பின்னர் 2 மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். நான் அது எப்படி நடக்கும் என்று நான் கேட்டதற்கு அழகர்சமி குழந்தை கொடுத்திருப்பதாக கூறி நான்கு மாதங்களில் 2 குழந்தைகள் பிறந்து விட்டதாக கூறி என்னிடம் பணம் அனுப்பும்படி கூறினார்.

நானும் அந்தப் பெண்ணின் பேச்சை சுயநினைவே இல்லாமல் நம்பி கடன் வாங்கி பணம் அனுப்பினேன். மேலும் என் சுயநினைவு இன்றி என் பெற்றோரிடம் எனக்கு திருமணம் ஆகிவிட்டது எனக்கு குழந்தை இருக்கிறது என்று கூறினேன். அந்தப் பெண் அவ்வப்போது பூஜை செய்ய வேண்டும் என்று அடிக்கடி பணம் கேட்டார். அதற்கு நானும் என்னுடைய வங்கி கணக்கிலிருந்து அவளின் குடும்பத்தினரின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி வைத்தேன். நான் இதுவரை 12,00,000 ரூபாயை வரை அனுப்பியிருக்கிறேன். நான் அவளை பார்க்க வேண்டும் என்று பலமுறை அழைத்தும் அவள் ஏமாற்றி வந்தாள். அதனால் அவளின் வீட்டின் முகவரியான ஆவடி ஆனந்தா நகருக்கு நேரில் வந்து பார்த்தேன். அப்போது அந்த வீட்டில் அவள் இல்லை. அதனால் பக்கத்து வீட்டில் வந்து விசாரித்தபோது குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்டதாகக் கூறினர். அதனால் அவள் எனக்கு அனுப்பிய போட்டோவை காண்பித்து விசாரித்தபோது அப்படியொரு பெண் அங்கு இல்லை என்று கூறினர். நான் கூறிய வீட்டின் முகவரியில் திருமணமான இரண்டு பெண்கள் இருப்பதாக தெரிவித்தனர். அதன்பிறகு நான் அவளுக்கு போன் செய்தபோது அவள் போனை எடுக்கவில்லை. அதன்பிறகே அவள் எனக்கு அனுப்பியது வேறு ஒரு பெண்ணின் போட்டோ எனத் தெரியவந்தது.

பணம் அனுப்பியதற்கான ஆதாரம்

இந்தச் சமயத்தில் சந்தியா என்ற ஃபேஸ்புக் ஐடியிலிருந்து என்னுடைய பெரியம்மா மகன் மகேந்திரன் என்பவரிடமும் கீர்த்தி ரெட்டியின் தங்கை தீக்ஷி ரெட்டி என பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். என்னிடம் கூறியதைப்போலவே தனக்குத்தானே தாலிக்கட்டிக் கொண்டு குழந்தை பிறந்துவிட்டதாகக் கூறி மகேந்திரனிடமும் 20,00,000 ரூபாயை அந்தப் பெண் ஏமாற்றியிருக்கிறார். எனவே என்னிடமும் என்னுடைய பெரியம்மா மகன் மகேந்திரனிடமும் சந்தியா என்ற போலியான ஃபேஸ்புக் ஐடியிலிருந்து அறிமுகமாகி வேறு ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பி ஆள்மாறாட்டம் செய்து நம்பிக்கை மோசடி செய்து 32,00,000 ரூபாயை ஏமாற்றிய பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன், 406, 416, 420 ஆகிய ipc பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாரதிராஜா, மகேந்திரனை ஏமாற்றியது ஐஸ்வர்யா எனத் தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஐஸ்வர்யா சிக்கியது எப்படி என ஆவடி போலீஸார் கூறுகையில், ``ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. அவரின் கணவர், ஆந்திர மாநிலம் நகரியில் வேளாண்மைத்துறையில் பணியாற்றி வருகிறார். ஐஸ்வர்யா, குடும்பத்தோடு ஆவடியில் வசித்து வருகிறார். ஐஸ்வர்யா, 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது அவரின் சகோதரி நடத்தும் ஃபேன்ஸி ஸ்டோரியில் வேலைப் பார்த்து வருகிறார்.

Also Read: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தாயாரிடம் ரூ.2.5 கோடி மோசடி! - மேனேஜரை வளைத்த நாக்பூர் போலீஸ்

பணம் அனுப்பிய மெசேஜ்

ஆடம்பரமாகவும் வசதியாகவும் வாழ ஆசைப்பட்ட ஐஸ்வர்யா, ஃபேஸ்புக்கில் சந்தியா என்ற பெண்ணின் பெயரில் போலியான ஐடி ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதன்மூலம் போலீஸ்காரர் பாரதிராஜா, அவரின் சகோதரர் மகேந்திரன் ஆகியோரிடம் கீர்த்தி ரெட்டி, தக்ஷி ரெட்டி என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரிடமும் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறி 32 லட்சம் ரூபாய் வரை பல தவனைகளில் வாங்கியிருக்கிறார். விசாரணையில்தான் கீர்த்தி ரெட்டி, தக்ஷி ரெட்டி என்ற பெயரில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்துள்ளோம்” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-woman-in-cheating-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக