Ad

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

Doctor Vikatan: எப்போதும் சோர்வு; நன்றாகத் தூங்கி எழுந்த பிறகும் தொடரும் தூக்கம்; என்னவாக இருக்கும்?

தினமும் இரவு எவ்வளவு நேரம் தூங்கினாலும் மறுநாள் தூங்கி எழுந்திருக்கும்போது புத்துணர்வாக உணர முடிவதில்லை. மீண்டும் சோர்வாகவும் தூக்கக்கலக்கமாகவுமே உணர்கிறேன். புத்தகம் படிக்கும்போதும் லேப்டாப்பில் வேலை பார்க்கும்போதும் உடல் மிகவும் சோர்வாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்... பலவருடமாக இப்படித்தான் உணர்கிறேன். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?

- சூரியகாந்த் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் கே. பாஸ்கர்

பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே.பாஸ்கர்.

``பொதுவாக, சோர்வுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை, தைராய்டு பிரச்னை, மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடல் சோர்வு உண்டாகலாம். தவிர டிபி எனப்படும் காசநோய், புற்றுநோய் போன்றவைகூட உடல் சோர்வை ஏற்படுத்தும். இது நாளாக, ஆக மிகவும் மோசமாகிக்கொண்டே போகும். எனவே, சாதாரண அசதி, களைப்பு, சோர்வு என உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக்கொள்ளாமல், முதலில் உங்கள் குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

Also Read: Doctor Vikatan: நன்றாகச் சாப்பிடுகிறேன்; ஆனாலும் எடை கூடவில்லை; என்னதான் தீர்வு?

அவரது அறிவுறுத்தலின் பேரில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு, அதில் FBC, B12, Ferritin, Vitamin D, TSH, U& E, HBA1C, LFT, CRP போன்றவற்றின் அளவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

எல்லா டெஸ்ட்டுகளும் நார்மலாக இருந்தால், உங்களுக்கு இருப்பது `க்ரானிக் ஃபட்டிக் சிண்ட்ரோம்' (Chronic Fatigue Syndrome) பாதிப்பாகக்கூட இருக்கலாம்.

Sleep

Also Read: Doctor Vikatan: தடுப்பூசிக்குப் பிறகு உடல் பருமன் அதிகரித்தது போல் உணர்கிறேன்; ஏன்?

உங்களைப் பரிசோதிக்கும் மருத்துவர் ஒருவேளை உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம் எனச் சந்தேகித்தால் அதற்கேற்ற டெஸ்ட் மற்றும் சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். `க்ரானிக் ஃபட்டிக் சிண்ட்ரோம்' பாதிப்பை உறுதிப்படுத்த பிரத்யேக டெஸ்ட் கிடையாது. அறிகுறிகள், உடல், மனநல பிரச்னைகள் ஆகியவற்றைப் பொறுத்து அது உறுதிசெய்யப்படும். அறிகுறியின் தீவிரத்துக்கேற்ப கவுன்சலிங், தெரபி, பயிற்சிகள் போன்றவை பரிந்துரைக்கப்படலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/why-do-i-feel-tired-even-after-sufficient-sleep

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக