Ad

வெள்ளி, 29 அக்டோபர், 2021

ரஜினி உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?- விளக்கும் நரம்பியல் மருத்துவர்

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவ அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் 30 வருட அனுபவம் மிக்க சென்னையைச் சேர்ந்த பிரபல மருத்துவர் டி. பாலசுப்பிரமணியனிடம் கேட்டோம்,

`` மருத்துவமனை அறிக்கையைப் பார்த்தபோது ஒன்று புரிகிறது. அக்டோபர் 28-ம் தேதியன்று ரஜினிகாந்த், மயக்க நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தக் குழாய்கள் செல்கின்றன. அவை கழுத்துப்பகுதி வழியாகத்தான் செல்லும். இந்த இடத்தில்தான், ரஜினிக்கு அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, லேசான மயக்கமோ, நினைவு தப்பிப் போவதற்கோ, பக்கவாதம் வருவதற்கோ வாய்ப்புகள் உள்ளன. அது அடைப்பின் தன்மையைப் பொறுத்தது.

Also Read: `சில நாள்களில் வீடு திரும்புவார்'- ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

மருத்துவர் டி.பாலசுப்பிரமணயன்

அந்த பாதிப்புகள் வராமல் தடுப்பதற்காகவும், சீரான ரத்தம் ஒட்டம் ஏற்படுத்தவும் இன்று Carotid Artery revascularization முறையில் சரிசெய்திருக்கிறார்கள். கழுத்துப் பகுதியில் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட, இரண்டு காரணங்கள் உண்டு. கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்புகளால் அடைப்பு ஏற்படலாம். அல்லது, அந்த இடத்தில் செல்லும் ரத்தக்குழாய் சுருங்கியிருக்க வாய்ப்பு உண்டு. அதுமாதிரி சந்தர்ப்பங்களில் அடைப்பை சரிசெய்து ஸ்டண்ட் வைத்து ரத்த ஒட்டத்தை சரிசெய்யலாம். இதைத்தான் ரஜினிக்கு அந்த மருத்துவமனை மருத்துவர்கள் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். இதுவரை இவ்வளவுதான் சொல்லமுடியும். அடுத்தகட்ட சிகிச்சை விவரங்கள் தெரியவரும்போது விரிவாகப் பேசுவோம் '' என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/nephrology-surgeon-explains-rajinikanths-medical-report-which-was-released-by-kauvery-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக