"சசிகலா விவகாரத்தில் அதிமுகவில் சர்ச்சை ஏதுமில்லை" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளது, அதிமுக தொண்டர்களை மேலும் குழப்பமடைய வைத்துள்ளது.
மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளித்து விட்டு வந்த செல்லூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார்.
"சசிகலா விஷயத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் இடையே முரண்பாடு உள்ளதே?" என்று செய்தியாளர்களின் கேள்விக்கு
"சசிகலா விவகாரத்தில் அதிமுகவுக்குள் எந்த சர்ச்சையும் கிடையாது. ஊடகத்தினர் ஆளும்கட்சியினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என்பதை பற்றி விசாரிக்காமல் அதிமுகவுக்குள் நடப்பது பற்றியே விசாரிக்கிறீர்கள். பழுத்த மரத்தில்தான் கல்லடிபடும்.
Also Read: ``எடப்பாடியை நீக்கச் சொன்னேன்.. என்னை நீக்கிவிட்டனர்!’’ - பரிதவிப்பில் பஷீர்
சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் எந்த கருத்தும் சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தைதான் ஒருங்கிணைப்பாளர் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது?
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்றுதான் ஓ.பி.எஸ். சொன்னார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால், பிற நிர்வாகிகளும் அதற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை" என்று கூறிவிட்டு கிளம்பினார்.
ஓ.பி.எஸ் பேசிய கருத்தே அதிமுகவுக்குள் புயல் அடித்துக் கொண்டிருக்கும்போது, அதை சரி என்பதுபோல் பேசியுள்ள செல்லூர் ராஜூவின் கருத்து கட்சியினரை மேலும் குழப்பமடைய வைத்துள்ளது.
source https://www.vikatan.com/news/politics/sellur-raju-press-meet-regarding-ops-statement-on-sasikala-re-union
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக