Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

`ஆர்யன்' என்று மகனுக்குப் பெயர் வைத்தது ஏன்? ஷாருக் கான் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது ஏராளமான பெயர்களைத் தேர்வு செய்து, அதன் அர்த்தத்தைப் பார்த்து, ஜோதிடப்படி பெயர் ஒத்துப்போகிறதா என்று ஆராய்ந்து பெயர் வைப்பது வழக்கம். இந்தி நடிகர் ஷாருக் கான், தன் மகன் ஆர்யன் கானுக்கு அந்தப் பெயர் வைத்தது குறித்த தகவலை, முன்னர் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஆர்யன் கான்

Also Read: ஆர்யன் கான்: 25 நாள்களுக்குப் பிறகு ஜாமீன்! - நீதிமன்றத்தின் நிபந்தனைகள் என்னென்ன?

ஷாருக் கானின் மகன் ஆர்யன் போதைப் பொருள் வழக்கில் சிக்கி நேற்று ஜாமீன் பெற்றுள்ளார். இஸ்லாமியரான ஷாருக் கான் தன் மகனுக்கு ஆர்யன் என்று பெயர் வைத்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆர்யன் என்பது சம்ஸ்கிருத இந்துப் பெயர். `உயர்வான' என்ற பொருள் உடையது. இது தொடர்பாக ஷாருக் கானிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது, அதற்கு அவர் பதிலளித்தள்ளார்.

`` `ஆர்யன் என்ற பெயரின் உச்சரிப்பு எனக்குப் பிடித்திருந்தது. அதனால் ஆர்யன் என்று பெயர் வைத்தேன். தன் கேர்ள்ஃப்ரெண்ட்ஸிடம் 'என் பெயர் ஆர்யன்' என்று அவர் பின்னாளில் சொல்லும்போது அது பெண்களால் விரும்பப்படும் என்று நினைத்தேன்'' என்றவர், ``ஆர்யன் பிறந்த போது எனது சாயல் மற்றும் என் மனைவி சாயலின் கலவையாக இருந்தான். எனக்கும் என் மனைவிக்கும் பெரிய கண்கள். ஆர்யனுக்கும் அப்படியே இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.

ஆர்யன் கான்

Also Read: ஆர்யன் கானுக்கு ஜாமீன்... விழாக்கோலம் பூண்ட ஷாருக் கானின் மன்னத் இல்லம்!

இந்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த கெளரி கான், ஷாருக் கானை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆர்யன், சுஹானா, ஆப்ராம் என இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். கெளரியின் விருப்பப்படியே தங்கள் முதல் குழந்தைக்கு ஆர்யன் என்று ஷாருக் கான் பெயர் வைத்து தன் மனைவியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் என்கிறார்கள் சிலர். சுஹானா என்ற பெயர் அரபி மொழியில் இருந்து எடுக்கப்பட்டது. இதன் பொருள் `அழகானது' என்பதாகும். வாடகைத் தாய் மூலம் பிறந்த தன் மூன்றாவது மகன் ஆப்ராம் (AbRam), பெயர் பற்றிச் சொல்லும்போது, அதில் இடம்பெறும் இந்துக் கடவுள் பெயரான `ராம்' தனக்கு விருப்பமானதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஷாருக் கான்.

படத்தயாரிப்பில் விருப்பம் கொண்டுள்ள ஆர்யன் அது தொடர்பாக அமெரிக்காவில் படித்துள்ளார்.



source https://www.vikatan.com/social-affairs/bollywood/shah-rukh-khan-shares-the-interesting-reason-behind-naming-his-son-aryan-khan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக