Ad

வெள்ளி, 29 அக்டோபர், 2021

கந்தன் இருக்கக் கவலை எதற்கு? மஹாஸ்கந்த ஹோமத்தின் மகிமைகளும் பலன்களும்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

கந்தனைப் போற்றிப் புகழ் பாடும் கந்த சஷ்டி விழா நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று தொடங்க உள்ளது. நவம்பர் 9-ம் தேதி சஷ்டி விழாவின் இறுதி நாளான சூர சம்ஹார விழா நடைபெற உள்ளது. சஷ்டியை ஒட்டி கந்த சஷ்டி நாளின் நான்காவது நாளான (7-11-21) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மகாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது.
தணியல் அகிலாண்டேஸ்வரி சமேத கயிலாசநாதர் ஆலயம்

ஐப்பசி மாதத்தின் பெருமைகளில் சிறப்பானது சஷ்டி விரதம். கந்தனை வழிபட உகந்த திதி சஷ்டி! அதிலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி, கந்த சஷ்டி என்று போற்றப்படுகிறது. முருகப்பெருமானுக்கு அவன் தந்தையைப்போல் ஆயிரம் ஆயிரம் திருநாமங்கள். சக்திபாலன், சரவணன், பரமகுரு, சுப்ரமண்யன், நிமலன், குருபரன், கார்த்திகேயன், சுவாமிநாதன், தண்டபானி, குகன்,

சுதாகரன், சத்குணசீலன், மயூரவாஹனன், தேவசேனாபதி, தீஷிதன், கிருபாகரன், பூபாலன்... இப்படிச் சொல்லிக்கொண்டே செல்லலாம். இதில் விசேஷமான பெருமை கொண்ட திருநாமம் கந்தன்.

தணியல் கயிலாசநாதர் ஆலயம்
கந்த கோட்டம், கந்த சஷ்டி விரதம், கந்த புராணம், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா, கந்த சஷ்டிக் கவசம் என கந்தனைக் கொண்டே பல சிறப்புகள் உண்டு. ஸ்கந்தன் என்றால் 'துள்ளிக் கொண்டு வெளிப்பட்டவன்' என்று பொருள். பகையை வெல்ல துள்ளிக் கொண்டு புறப்பட்டவன் ஸ்கந்தன். ஸ்கந்தன் என்றால் 'ஒன்று சேர்க்கப்பட்டவன்' என்றும் பொருள் உண்டு. ஆறு பிள்ளைகளாக வளர்ந்தவர்களை சக்தியே ஒன்றிணைத்தாள். அதனால் கந்தனை வணங்கினால் எல்லாமே ஒன்றுகூடும் என்பதும் நம்பிக்கை.

ஈனின் நெற்றிகண்ணில் இருந்து வெளிபட்ட தீப்பொறி சரவணப் பொய்கையில் இருந்த தாமரை மலரின் நடுவே உள்ள கந்தத்தில் பட்டு ஆறு குழந்தைகளாகத் தோன்றியதால் கந்தகமூலவன் என்றாகி அதுவே கந்தன் என்றானதாகவும் சொல்வதுண்டு. கந்து என்றால் பற்றுக்கோடு, கந்தனே நம்மை பற்றிக்கொண்டு பிறவிக்கடலை நீந்த வைப்பான் என்றும் பொருள் உண்டு. சம்ஸ்கிருத நிகண்டு ஒன்று கந்தன் என்றால் 'பகைவர்களை ஒடுக்குபவன்' என்று பொருள் சொல்கிறது. இப்படி கந்தன் என்ற ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. கந்தனின் பெருமை உணர்த்தும் கந்த சஷ்டி விழாவுக்கும் விரதத்துக்கு ஆயிரம் ஆயிரம் பெருமைகளும் பலன்களும் உண்டு என்கின்றன புராணங்கள். இந்த கந்த சஷ்டி விழாவை மேலும் சிறப்பிக்க உங்கள் சக்தி விகடனும் தணியல் முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்த இருக்கிறது.

தணியல் அகிலாண்டேஸ்வரி

விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டாரத்தில், திண்டிவனம் அருகே உள்ள கிராமம் தணியல். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத கயிலாசநாதர் ஆலயம். சிவாலயமாக இந்த ஆலயம் இருப்பினும் இங்குள்ள முருகப்பெருமான் புராணச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்டு விளங்குகிறார். அசுரர் வதம் முடித்து பகை வென்று வடக்கே சென்ற முருகப்பெருமான், இந்த தலத்தில் தேவியர் இருவர் புடை சூழ எழுந்தருளினார். அப்போது சினம் தணிந்து அசுரரை வதைத்த தோஷம் நீங்க சிவலிங்க பூஜை செய்தார்.

ஞான கந்தனாக எழுந்தருளி வழிபட்ட முருகப்பெருமானுக்கு தந்தையும் தாயுமான சிவசக்தியர் காட்சி தந்து முருகனைப் பாராட்டி மகிழ்ந்தார்களாம். இதனால் குளிர்ந்து போன முருகப்பெருமான் சினம் தணிந்து சிறப்பு கொண்டார் எனவும், இதனாலேயே இந்த தலம் தணியல் என்றானதாகவும் கூறப்படுகிறது. மகிழ்வுற்ற முருகப்பெருமான் இங்கு வந்து தம்மை வேண்டிய தேவர்களுக்கு எல்லாம் வேண்டிய வரங்களை அளித்தார் என்றும் தலவரலாறு கூறுகிறது. திருத்தணிகை தலம் போலவே மத்திய திருத்தணிகை என்று போற்றப்படும் தலம் தணியல். அருணகிரிநாத பெருமான் தனது திருப்புகழில் தணியல் உறையும் தண்டபாணி தெய்வத்தை போற்றிப் புகழ்ந்துள்ளார் (அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல் வெற்பபார்ப் பதிந ...... திகுமாரா...)

Also Read: ஜோதிடரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22... மேஷம் முதல் மீனம் வரை!

சிங்காரபுரம், கந்த பட்டிணம், திருத்தணியல், சேவல்புரி என்றெல்லாம் திருநாமங்கள் கொண்ட முருகப்பெருமான் உறையும் திருத்தலத்தில் வரும் கந்த சஷ்டி விழாவை ஒட்டி உங்கள் சக்தி விகடனும் தணியல் முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்த உள்ளது.

இந்த அரிய வகை ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் முருகனின் அருளால் மகப்பேறு, மணப்பேறு, நல்வாழ்வு, நற்பெருமை, நீங்காத புகழ், ஆரோக்யம், ஆயுள், செல்வம் யாவும் கிட்டும் என்கிறார்கள். பகை அற்ற நிம்மதி, கடன்கள் நீங்கிய சந்தோஷம், உற்சாகம் நிறைந்த வாழ்வும் கிட்டும். மேலும் பிறவிப்பிணி நீங்கி கந்தனருள் எப்போதும் துணை நிற்கும். குடும்பப் பிரச்னைகள் நீங்கவும், வேலை வாய்ப்பு பெறவும், கடன், பிணி தொல்லைகள் அகலவும், தொழில்-வியாபாரம் பெருகவும் இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் உதவும் என்கிறார்கள்.

கந்தன் இருக்கக் கவலை எதற்கு என்பார்கள் பெரியோர்கள். கந்தன் அருளால் எல்லா கவலைகளும் நீங்கி வாழ்வாங்கு வாழ வேண்டுகிறோம்!
தணியல் முருகப்பெருமான் கோயில்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/gods/kandha-sashti-festival-mahaskantha-homam-in-thaniyal-village-sri-akilandeswari-samedha-kailasanathar-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக