Ad

வெள்ளி, 29 அக்டோபர், 2021

அடையாறு ஆனந்த பவனின் தீபாவளி ஸ்பெஷல் காம்போ! #DiwaliCombo

மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்தப் பிளாஸ்டிக் டப்பாவைப் பார்த்தவுடன், அதற்குள் ஸ்வீட்ஸ் இருக்குமே என்று ஆவல் தோன்றும்! திறந்து பார்த்தால், அதற்குள் ஊசி, தையல் நூல், ஊக்கு, தைலம் போன்ற குட்டி குட்டி ஜாமான்களை போட்டு வைத்திருப்பார் அம்மா! பேப்பர் பாக்ஸில் ஸ்வீட்ஸ் வந்த காலத்தை மாற்றி, அனைவரும் பயன்படுத்தும் அழகிய பிளாஸ்டிக் டப்பாவில் இனிப்புகளை வழங்கி கவனத்தை ஈர்த்த நிறுவனம் 'அடையாறு ஆனந்த பவன் ஸ்வீட்ஸ்!'

முதல் தரம், சுவை நிரந்தரம்.

ஓரன்றல்ல இரண்டல்ல, 150+ இனிப்பகங்கள் மற்றும் ஓட்டல்களை இன்று நிர்வகித்து வருகிறது அடையாறு ஆனந்த பவன் ஸ்வீட்ஸ். சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்கள். புதுச்சேரி, பெங்களூரு, டெல்லி மட்டுமல்லாது, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கென்யா என்று கடல் கடந்து பாரம்பர்ய தென்னிந்திய சுவையைக் கடத்திக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்!

தரம்தான் இங்கு எல்லாமே! மூலப் பொருள்கள் ஆனந்த பவன் ஆலை கேட்டுக்குள் நுழையும்போதே அதன் தரம் பரிசோதிக்கப்பட்ட பின்பே உள்ளே கொண்டுவரப்படுகின்றன. பின்னர் ஒவ்வொரு மூலப்பொருளின் ஒரு பகுதி, லேப் டெஸ்டிங்கிற்கு அனுப்பப்பட்டு சோதனை முடிவுகள் வந்தவுடன் இனிப்புகள் மற்றும் காரங்கள் செய்ய எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

ஆலையில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான ஊழியர்களும் தலைக்குத் தொப்பி, முகக்கவசம் மற்றும் கிளவுஸ் அணிந்து செயல்படுகின்றனர். செய்யப்பட்ட ஸ்வீட்ஸ் மற்றும் காரம் கடைகளை அடையும் வரை, தின்பண்டங்களில் கைகள் படுவதே இல்லை! அன்றைய தினம் செய்யப்பட்ட பதார்த்தங்கள் 99% அன்றைக்கே விற்பனையாகிவிடுகின்றன என்பதுதான் ஆனந்த பவனின் ஸ்பெஷாலிட்டி!

'அடையாறு' ஆனந்த பவனின் கதை.

அடையாற்றுக்கு அப்போதைய லேண்ட் மார்க் ஆலமரம், இப்போது ஆனந்த பவன் என்றாகிவிட்டது! ராஜபாளையத்தில் 1960-களில் குரு ஸ்வீட் ஸ்டால் என்ற பெயரில் சிறிய இனிப்புக் கடை ஒன்றை நிறுவினார் திருப்பதி ராஜா (விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்). அடுத்தடுத்து, பெங்களூரில் ஸ்ரீ ஸ்ரீநிவாஸா ஸ்வீட் ஸ்டால் மற்றும் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆனந்த பவன் என்ற ஸ்வீட் ஸ்டாலையும் நிறுவினார். அதன்பிறகு அடையாற்றில் இன்னொரு ஆனந்த பவன் கிளையை நிறுவ, அதுவே அவர்களின் அடையாளம் ஆகிப் போனது!

திருப்பதி ராஜா அவர்கள் தொடங்கி வைத்த இந்த சாம்ராஜ்ஜியத்தை, தற்போது அவரின் புதல்வர்கள் வெங்கடேசன் மற்றும் ஸ்ரீநிவாஸ ராஜா ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். தென்னகத்தின் மைசூர் பாகு, வடக்கின் மலாய் பேடா, கிழக்கின் பாதாம் அல்வா, மேற்கின் உலர் பழ இனிப்பு வகைகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கி இனிப்பு உலகில் ஒன்றுபட்ட இந்தியாவின் அடையாளமாய் அடையாறு ஆனந்த பவன் திகழ்கின்றது. 250+ இனிப்புகள், 200+ கார வகைகளை விற்பனை செய்து வரும் ஆனந்த பவன், A2B எனும் பெயரில் ரெஸ்டாரண்ட் சேவையையும் வழங்கி வருகிறது.

தீபாவளிக்கு பட்சணம் பாக்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க!

தீபாவளிக்கு வேண்டிய அனைத்து ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகளை ஆனந்த பவனில் வாங்கி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்!

அதிரசம், ரவா லட்டு, மா லட்டு, ஸ்வீட் சோமாஸ், மைசூர் பாகு, சீடை, கை முறுக்கு, மினி தேன்குழல், மெட்ராஸ் மிக்சர், நவதானிய மிக்சர், கார சேவை, மினி தட்டை, முள்ளு முறுக்கு, தீபாவளி லேகியம், கங்கை நீர், நெய், அகல் விளக்கு மற்றும் ஸ்லோகம் புத்தகம் ஆகிய 19 பொருள்கள் அடங்கிய காம்போ பேக் வெறும் 1200 ரூபாய் மட்டுமே. இதேபோல 13 பொருள்கள் அடங்கிய ஸ்மால் காம்போவையும் ரூ. 600-க்கு வழங்குகிறது அடையாறு ஆனந்த பவன்!

தித்திப்பான தருணங்கள் பெருகட்டும், அடையாறு ஆனந்த பவனின் விழாக்கால நல்வாழ்த்துகள்!



source https://www.vikatan.com/sponsored/sponsor-content/adyar-ananda-bhavan-presents-diwali-special-combo-pack

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக