Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

தமிழ்நாடு நாள்: `நவம்பர் 1-ம் தேதியா.. ஜூலை 18-ம் தேதியா?!' - விகடன் #உங்கள்கருத்து முடிவுகள் என்ன?

'தமிழ்நாடு நாள்' இனி ஜூலை 18-ம் தேதி தான் கொண்டாடப்படும். அதற்கான அரசாணையும் விரைவில் வெளியிடப்படும் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு, தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக 2019 முதல் மாநிலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அப்போதைய திமுக அரசு சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ம் தேதியை இனி 'தமிழ்நாடு நாளாக'க் கொண்டாடப் போவதாக தமிழக அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஸ்டாலின்

இது தொடர்பாகக் கடந்த சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``2019-ம் ஆண்டு முதல் முந்தைய அதிமுக அரசால் நவம்பர் 1-ம் தேதி 'தமிழ்நாடு நாளாக'க் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஜூலை 18-ம் தேதியைத் தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைத்தனர். அதனடிப்படையில், மாநிலத்தில் இனி ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

`தமிழ்நாடு நாள்' தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், ஒரு குழந்தை என்றைக்குப் பிறக்கின்றதோ அந்த நாளை தான் பிறந்த நாளாகக் கொண்டாடவேண்டுமே தவிர ஒரு கருப்பையில்‌ குழந்தை உருவாகிய நாளை குழந்தையின் பிறந்த நாளாக எடுத்துக்‌கொள்ள முடியாது என்றும், இந்த அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியிருக்கின்றனர்.

ராமதாஸ் - ஓ.பி.எஸ்

இந்த நிலையில், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், அரசியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் முரண்பட்டு நிற்கும் இந்த `தமிழ்நாடு நாள்' விவகாரம் தொடர்பாக நாம் விகடனின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் `#உங்கள் கருத்து' பகுதியில் வாசகர்களிடம், 'வலுக்கும் விவாதம்... தமிழ்நாடு நாள் என்றைக்குக் கொண்டாடப்பட வேண்டும்?' என்ற தலைப்பில் கேள்வியை முன்வைத்திருந்தோம்.

இந்த கேள்விக்கு `நவம்பர் 1-ம் தேதி’, `ஜூலை 18-ம் தேதி’, `ஜனவரி 14-ம் தேதி’, `கருத்து இல்லை’ என 4 சாய்ஸ்களையும் அளித்திருந்தோம். நேற்றைய தினம் பதிவிடப்பட்ட விகடனின் 'உங்கள் கருத்து'க்கு இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏராளமானோர் `தமிழ்நாடு நாள்' தொடர்பான தங்களின் கருத்துகளைப் பதிவிட்டிருக்கின்றனர். அதன் முடிவுகள் கீழே...

விகடன் உங்கள் கருத்து

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாகப் பதிவிடப்பட்ட கேள்வியில், ஜூலை 18-ம் தேதி அன்று தான் கொண்டாட வேண்டும் என்று 43 சதவிகிதம் வாசகர்களும், நவம்பர் 1-ம் தேதியைத் தான் கொண்டாட வேண்டும் என்று 48 சதவிகிதம் வாசகர்களும், ஜனவரி 14-ம் தேதி அன்று தான் கொண்டாட வேண்டும் என்று 3 சதவிகிதம் வாசகர்களும், கருத்து இல்லை என்று 7 சதவிகிதம் வாசகர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டிருக்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-results-regarding-tamilnadu-day-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக