Ad

திங்கள், 25 அக்டோபர், 2021

ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: ``தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை புண்படுத்தியது!” - நடிகர் விஜய்

`சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது"

-இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துகள் இவை.

உயர் நீதிமன்றம்

நீதிபதியின் இந்த கருத்துகள் தமிழகத்தில் விவாத பொருள் ஆனது. தொடர்ந்து வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்

இன்று இந்த வழக்கில் விஜய் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், ``இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை புண்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``கஷ்டப்பட்டு உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது. வழக்கு விவரங்களில் தொழிலை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை” என தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்க கோரும் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னை தேச விரோதியாக விமர்சித்து கருத்து கூறியதும் தேவையற்றது என குறிப்பிட்டிருக்கிறார்.

தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க கோரும் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/judiciary/actor-vijay-replies-on-rolls-royce-car-tax-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக